Published : 29 May 2015 09:07 AM
Last Updated : 29 May 2015 09:07 AM

புகார் கொடுக்க சென்ற பெண்ணின் கன்னத்தில் அறைந்த ஆய்வாளர்: காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

புகார் கொடுக்கச் சென்ற பெண்ணின் கன்னத்தில் ஆய்வாளர் அடித்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சாலைகள் விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றத் தின்போது வீடுகளை இழந்தவர் கள் உட்பட பலர் சென்னை துரைப் பாக்கம் அருகே கண்ணகி நகரில் வசிக்கின்றனர். யானைகவுனி பகுதியில் சாலை விரிவாக்கத்தின் போது வீட்டை இழந்த குமார் என்பவரும் இங்கு வசிக்கிறார். இவரது மனைவி பத்மாவதி (38).

சாலைகள் விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றத் தின்போது வீடுகளை இழந்தவர் கள் உட்பட பலர் சென்னை துரைப் பாக்கம் அருகே கண்ணகி நகரில் வசிக்கின்றனர். யானைகவுனி பகுதியில் சாலை விரிவாக்கத்தின் போது வீட்டை இழந்த குமார் என்பவரும் இங்கு வசிக்கிறார். இவரது மனைவி பத்மாவதி (38).

இவர்களது மகன் மோகன் ராஜ் (20), நேற்று முன்தினம் இரவு உறவினர் சங்கர் என்பவருடன் பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந் தார். அப்போது 4 பேர் கும்பல் அவர்களை வழிமறித்து தாக்கி விட்டு, பணத்தை பறித்துச் சென்றது.

இதுகுறித்து புகார் கொடுப் பதற்காக மோகன்ராஜை அழைத்துக் கொண்டு கண்ணகி நகர் காவல் நிலையத் துக்கு சென்றார் பத்மாவதி. அங்கிருந்த ஆய்வாளரிடம் நடந்த சம்பவத்தைக் கூறியுள் ளார்.

வாக்குவாதம்

அப்போது ஆய்வாளருக் கும் பத்மாவதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பத்மாவதியின் கன்னத் தில் ஆய்வாளர் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பத்மாவதியின் உதடு கிழிந்து ரத்தம் வந்தது.

கொள்ளையர்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்த மோகன்ராஜும், ஆய்வாளர் அறைந்ததில் காயமடைந்த பத்மாவதியும் தனியார் மருத் துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த கண்ணகி நகர் பகுதி மக்கள், நேற்று காலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் உயரதிகாரிகள் பொது மக்களை சமாதானப்படுத்தினர். ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதி காரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x