Published : 28 May 2015 07:41 AM
Last Updated : 28 May 2015 07:41 AM

கரை திரும்பாத 5 மீனவர்களை மீட்க அமைச்சர் நடவடிக்கையால் 4 படகுகள் விரைந்தன

காசிமேடு மீன்பிடி துறைமுகத் திலிருந்து ஜி.என்.பேட்டை மீனவப் பகுதியைச் சேர்ந்த கடும்பாடி (34), மாயாண்டி (35), மணி (26), சக்தி வேல் (25), சுரேஷ் (19) ஆகிய 5 பேர் மீன் பிடிக்க பைபர் படகில் கடந்த மே 22-ம்தேதி பிற்பகல் 2 மணிக்கு சென்றனர். அன்றிரவு கரைக்கு திரும்பவேண்டிய அவர்கள் இன்னும் திரும்பவில்லை.

இந்நிலையில் மே 23, 24 ஆகிய தேதிகளில் அவர்களின் உறவினர்கள் காசிமேட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அமைச் சர் கே.ஏ.ஜெயபால் மீனவ பிரதிநிதி களை திங்கள்கிழமை சந்தித்தார். அமைச்சரின் நடவடிக்கையைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் 4 படகுகள் காணா மல் போன மீனவர்களைத் தேடிச் சென்றன.

இது தொடர்பாக மீனவர் கடும்பாடியின் மனைவி சுதா கூறும்போது, “எங்கள் குடும்பம் எனது கணவரின் வருவாயில்தான் பிழைத்து வருகிறது. எனது கணவர் உள்ளிட்ட 5 பேரையும் உயிருடன் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மணியின் அக்கா ஜெயா கூறும் போது, “இதற்கு முன்பு மீனவர்கள் கரை திரும்பாதபோது சில தினங்களில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த முறை 5 நாட்கள் ஆகிவிட்டன. அதனால் நாங்கள் அச்சத்துடன் இருக்கிறோம்” என்றார்.

மீட்பு நடவடிக்கை குறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காற்று வீசும் திசை மாறுவதன் காரணமாக மீனவர்கள் வேறு திசைக்கு செல்வதும், அவர் களை கண்டுபிடிப்பதும் வழக்க மான ஒன்று. வான்வழி தேடுதலை முடித்துவிட்டோம். அதில் யாரை யும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

வான்வழி தேடலில் கிடைக்காத வர்கள், நீர் வழி தேடலில் கிடைப் பார்களா என்று மீனவ மக்கள் முன்னணி தலைவர் ஜெ.கோசு மணியிடம் கேட்டபோது, “வான் வழித் தேடலில் கண்டுபிடிக்க முடியாத நிலையில், நீர் வழித் தேடலில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது சிரமம். இருப்பி னும் ஒரு நம்பிக்கையில் 4 படகு கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மறியலுக்கு பின்னர் மீனவர்களுடன் கிளம்பிய கட லோர காவல் படையின் படகு, 30 நிமிடங்களில் போதிய டீசல் இன்றி கரை திரும்பியது. இந்த சம்பவத்தை பார்க்கும்போது, மீனவர் பிரச்சினையையும் தாண்டி, நாட்டின் பாதுகாப்பே கேள்விக் குறியாகியிருப்பது அம்பலமாகி யுள்ளது. இந்த விவகாரத்தில் மீன் வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெய பாலின் நடவடிக்கை பாராட்டுக்கு ரியது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x