Published : 23 May 2015 07:56 AM
Last Updated : 23 May 2015 07:56 AM
தமாகா மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் நேற்று வெளி யிட்டார்.
அதன் விவரம் வருமாறு
மூத்த துணைத் தலைவர்கள்: எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ்.
துணைத் தலைவர்கள்: வேலூர் ஞானசேகரன், கோவை தங்கம், பி.ஆர்.எஸ். வெங்கடேசன், கே. கந்தசாமி, எஸ்.வேணுகோபால், எஸ். ராமசுப்பு, கே.ராணி, ஈரோடு எஸ்.ஆறுமுகம், எம்.எஸ். ஹமீது.
பொதுச்செயலாளர்கள்: ஏ.ஜி.எஸ். ராம்பாபு, ஏ.எஸ். சக்தி வடிவேல், எஸ்.பி. உடையப்பன், பி,தீர்த்தராமன், விடியல் சேகர், பி.விஸ்வநாதன், திருஞானசம் பந்தம், முருகவேல் ராஜன், பழனி வேல், திருவேங்கடம், முனவர் பாட்சா, தாம்பரம் நாராயணன், சாஸ்திரி சீனிவாசன், எஸ்.ஆர்.கே. மனோகரன், பி.காந்தி, மோகன் கார்த்திக், முத்தழகன், அசன் அலி, புரட்சி மணி, ரவிவர்மா.
இது தவிர 32 செயலாளர்கள், 32 இணைச் செயலாளர்கள் என மொத்தம் 96 மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் உயர்மட்ட குழுத் தலை வராக கே.பாரமலை, ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவராக என்.எஸ்.வி. சித்தன், தேர்தல் முறையீட்டு குழுத் தலைவராக ஏ.எம்.வேலு ஆகியோரும், கொள்கைப் பரப்புச் செயலா ளர்களாக 25 பேரும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
அணிகளின் அமைப்பாளர்கள்
இளைஞரணி - எம்.யுவராஜா, மாணவரணி சுனில் குமாரராஜா, மகளிரணி மகேஸ்வரி, தொண்டரணி அயோத்தி, விவசாய அணி புலியூர் நாகராஜன், மருத்துவர் அணி டாக்டர் ரகுநாதன், மீனவர் அணி எம்.கஜநாதன், எஸ்.சி, எஸ்.டி அணி கே.வி.ஆர். ராம்பிரபு என மொத்தம் 15 அணிகளுக்கு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
70 செயற்குழு உறுப்பினர்கள், 66 மாவட்டத் தலைவர்கள், 6 தலைமை நிலையச் செயலாளர் களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஞானதேசிகன் மகனுக்கு பதவி
தமாகா மூத்த தலைவரான பி.எஸ்.ஞானதேசிகனின் மகன் விஜய் ஞானதேசிகன் சமூக வலைதள அணியின் அமைப்பா ளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 24-ம் தேதி சென்னை யில் கட்சியின் முதல் செயற்குழு நடைபெறவுள்ள நிலையில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப் பட்டுள்ளனர். சென்னை, கன்னியா குமரி மேற்கு, கோவை மாநகர் ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்டத் தலைவர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமாகா மூத்த தலைவரான பி.எஸ்.ஞானதேசிகனின் மகன் விஜய் ஞானதேசிகன் சமூக வலைதள அணியின் அமைப் பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT