Published : 05 May 2015 07:57 AM
Last Updated : 05 May 2015 07:57 AM
தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி தனது சுவீகாரப் புதல்வர் ஐயப்பன் என்ற முத்தையாவின் சுவீகாரத்தை குல வழக்கப்படி ரத்து செய்துவிட்டதாக அறிவித் திருந்த நிலையில், `நமது செட்டிநாடு’ என்ற மாத இதழைத் தொடங்கி இருக்கிறார் ஐயப்பன்.
நகரத்தார் செய்திகளுக்காக நகரத்தார் மலர், தன வணிகன், நகரத்தார் இதழ், நகரத்தார் போஸ்ட், அப்பச்சி, அப்பச்சி வந்தாச்சு, ஆச்சி வந்தாச்சு உள் ளிட்ட 13 பத்திரிகைகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், 14-வதாக `நமது செட்டி நாடு’ மாத இதழை ஆரம்பித்திருக்கிறார் ஐயப்பன். இதன் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் காரைக்குடியில் நடைபெற்றது.
ஐயப்பன் - எம்.ஏ.எம் இடையில் பிளவு ஏற்பட்டு, இருவரும் இரு துருவங்களாகிவிட்டதால் இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் நகரத்தார் களில் பெரும் பகுதியினர் கலந்து கொள்ளவில்லை.
விழாவுக்கு சிறப்பு விருந்தினர் களாக அழைக்கப்பட்டிருந்த குன்றக்குடி பொன்னம்பல அடி களார், லேனா தமிழ்வாணனின் தம்பி ரவி தமிழ்வாணன், பிள்ளை யார் பட்டி பிச்சைக் குருக்கள் உள்ளிட்டவர்களும் விழாவில் கலந்துகொள்ளவில்லை.
நகரத்தார் பொறுப்பில் உள்ள டிரஸ்ட்டின் கீழ் செயல்படும் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் விழாவை நடத்த முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசியில் அதுவும் மாற்றப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த பத்திரிகை யின் பின்னணியில் இருக்கும் ஐயப்பனும் விழாவில் கலந்துகொள்ளவில்லை.
நகரத்தார்களின் கல்வி, ஆன்மிக, தமிழ்ப்பணிகளுக்காக இதழ் தொடங்கப்பட்டதாக சொல் லப்படுகிறது. குறிப்பிட்ட மாதங்கள் வரை, பத்திரிகையை நகரத்தார் இல்லங்களுக்கு இலவசமாகத் தரப் போகிறார்களாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT