Published : 23 May 2014 09:30 AM
Last Updated : 23 May 2014 09:30 AM

வணிகர்கள் அச்சப்பட வேண்டாம்: ரவுடி கேபிரியல் மிரட்டல் குறித்து ஐ.ஜி விளக்கம்

மிரட்டி பணம் பறிக்க முயல்வோர் குறித்து வணிகர்கள் பயப்பட வேண்டாம், அதுபோன்ற நபர்கள் குறித்து காவல் துறைக்கு பயப்படாமல் தகவல் தெரிவிக்கலாம் என்றார் மத்திய மண்டல காவல்துறை தலைவரான ராமசுப்பிரமணி.

ஏழு கொலை உள்பட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைஐஜிய பிரபல ரவுடி கேபிரியேல் சென்னை புழல் சிறையில் இருந்தபடி தனது அடியாட்கள் மூலம் சில தினங்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள நகைக்கடை அதிபர் ஒருவரை இரண்டு லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக ‘தி இந்து’வில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த செய்தி வெளியானதும் மத்திய மண்டல காவல்துறை வட்டாரம் சுறுசுறுப்பானது. புழலில் உள்ள கேபிரியேலை உடனடியாக ஒரு தினம் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த தகவல்களைக் கொண்டு வெளியில் உலவிக்கொண் டிருக்கும் அவரது கூட்டாளிகளை வளைக்க காவல் துறையினர் வலைவிரித்துள்ளனர்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மண்டல காவல்துறை தலைவரான ராமசுப்பிரமணி, “கேபிரியேலிடம் விசாரித்து முக்கிய தகவல்களை காவல் துறையினர் திரட்டியுள்ளனர். மிரட்டி பணம் பறிக்கும், அச்சுறுத்தும் கேபிரியேலின் கூட்டாளிகளை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். இதுபோன்ற மிரட்டல்களுக்கு வணிகர்கள் பயப்பட வேண்டாம். அதுபோன்ற நபர்கள் குறித்து காவல் துறைக்கு பயப்படாமல் தகவல் தெரிவிக்கலாம்” எனவும் அவர் வணிகர்களைக் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x