Published : 30 May 2015 10:10 AM
Last Updated : 30 May 2015 10:10 AM

ரூ.2154.26 கோடி செலவில் அமைக்கப்பட்டவை: 63 புதிய துணை மின் நிலையங்கள் - முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

காஞ்சிபுரம், மதுரை, ஈரோடு, கோவை உட்பட 24 மாவட்டங்களில் ரூ.2154.26 கோடி மதிப்பில் புதிய தாக அமைக்கப்பட்ட 63 துணை மின் நிலையங்களை முதல்வர் ஜெய லலிதா நேற்று திறந்து வைத்தார்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 4991.5 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின் இந்த கோடை காலத்தில் வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

மின் பாதையில் ஏற்படும் மின் இழப்பையும், மின் பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப் படும் உச்சக்கட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க கூடுதல் துணை மின் நிலைங்கள் அமைப்பது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ரூ.57.15 கோடி யில் ஈரோடு மாவட்டம்- அந்தி யூர், அளுக்குளி, நம்பியூர், புதுசூரி பாளையம், மலையப்பாளையம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 5 துணை மின் நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம்

இது தவிர, கோவை மாவட்டம்- கோவை, காலை புதூர், செல்லப்பம் பாளையம்; காஞ்சிபுரம்- பெரும்பாக் கம்,வடக்குப்பட்டி; திருவள்ளூர்- திருத்தணி, மாத்தூர்; விழுப்புரம்- அழாபுரம், மணலூர் பேட்டை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட துணை மின் நிலையங்களும் நேற்று திறக்கப்பட்டன.

மதுரை- இலந்தைக்குளம் தகவல் தொழில்நுட்ப பூங்கா, சின்னக்கட்டளை; நெல்லை- மூலக்கரைப்பட்டி, சங்கனான் குளம்; திண்டுக்கல்- மினுக்கம்பட்டி; திருவண்ணாமலை-மண்ட கொளத்தூர்; கன்னியாகுமரி- ஆசாரிப்பள்ளம்; விருதுநகர் - வெம்பக்கோட்டையில் அமைக் கப்பட்டுள்ள துணை மின்நிலை யங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம்

இவை தவிர கடலூர்-செம் மண்டலம்; நாமக்கல்-பல்லக் காபாளையம்; தருமபுரி-வேப் பிலைப்பட்டி; கிருஷ்ண கிரி- ஆலம்பட்டி ஜெகதேவி, கெல மங்கலம், ஒரப்பம்; சேலம்- மல்லியக்கரை, கூடமலை, நங்கவள்ளி, தேவூர்; தூத்துக்குடி - கயத்தாறு,துரைசாமிபுரம், கொம்புக்காரநத்தம், பசுவந்தணை யில் உள்ள துணை மின் நிலையங்களும் திறக்கப்பட்டன.

மேலும் திருப்பூர்- ஓலப்பாளையம், கோட்டமங்கலம், பல்ல கவுண்டன்பாளையம், வஞ்சிபாளையம்; நாகை- பொறை யாறு, பெரம்பூர், மணக்குடி; பெரம்பலூர்-பேரளி,ஆலம்பாடி, கழனிவாசல்; புதுக்கோட்டை-தொண்டைமான் நல்லூர், புதுக்கோட்டை நகரம்; தஞ்சை-கரம்பயம், வலங்கைமான், பள்ளத் தூர்; திருவாரூர்- கூத்தாநல்லூர், சித்தேரி, திருச்சி- காட்டுப்புத்தூர், எடமலைப்பட்டிபுதூர், மெயின்கார்டு கேட்; வேலூர்- திருவலம்,வாணியம்பாடி, சோமலாபுரம்,வாலாஜா, போர்ட் ரவுண்டில் என ரூ.2097.11 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட 58 துணை மின் நிலையங்களையும் திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழாவில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், தலைமைச்செயலர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தி துறை செயலர் ராஜேஷ் லக்கானி, மின்வாரிய தலைவர் எம்.சாய்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x