Published : 31 May 2015 10:09 AM
Last Updated : 31 May 2015 10:09 AM

‘வடகரை’ நூல் அறிமுக விழா: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பங்கேற்பு

புதுச்சேரி திருக்குறள் மன்றம் சார்பாக தமிழக ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய, ‘வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு’ நூல் அறிமுக விழா நேற்று புதுச்சேரியில் நடைபெற்றது.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பங்கேற்று, ‘வடகரை’ நூலை வெளியிட கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் பெற்றுக் கொண்டார். கவிஞர் புவியரசு, எழுத்தாளர் நாஞ்சில்நாடன், முனைவர் கிருங்கை சேதுபதி, கவிஞர் அ.வெண்ணிலா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். ஞானசம்பந்தன் பேசும்போது, “ஒரு வம்சத்தின் வரலாறை கூறும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது நமது இளமைப் பருவம் நினைவுக்கு வரும். கதை சொல்லும் பழக்கம் மறைந்துவிட்டதை நினைவூட்டும் விதத்தில், இதில் கதை சொல்லப்பட்டுள்ளது. புத்தகம் வாங்குவது நமக்கு பெருமை. நல்ல கருத்துக்களை கேட்டு, படித்து அனுபவங்களைப் பெற வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x