Published : 27 May 2015 10:09 PM
Last Updated : 27 May 2015 10:09 PM

மோடி மீதான மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி அடையவில்லை: சரத்குமார்

கடந்த ஓராண்டு மோடி தலைமையிலான ஆட்சியில் மக்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி அடையவில்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

கோவையில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இன்று வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால் வருவாய் பாதிக்கும் என்பதால்தான் தயக்கம் காட்டப்படுகிறது. அதற்கான மாற்று வழியை சிந்திக்க வேண்டியது அடுத்தகட்ட பணியாகும்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க் கட்சிகள் தொடர்ந்து விமர்சிப்பது அர்த்தமற்றது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும், வெளிநாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்தவும் பயணம் உதவுகிறது. இருப்பினும் கடந்த ஓராண்டு மோடி தலைமையிலான ஆட்சியில் மக்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி அடையவில்லை.

திமுக பொருளாளர் ஸ்டாலின், அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திப்பதில் எவ்வித பலனும் ஏற்படப்போவது இல்லை. அவர்கள் கூட்டணி அமைப்பதற்குள் தேர்தல் முடிந்துவிடும். சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக தீர்ப்புக்கு எதிராக திமுக மேல்முறையீடு செய்தாலும், அதிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x