Published : 30 May 2015 07:54 AM
Last Updated : 30 May 2015 07:54 AM

நீதிமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால் நாம் பாதிக்கப்படுவோம்: நீதிபதி வி.தனபாலன் பிரிவு உபசார விழாவில் உருக்கம்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.தனபாலன் வரும் 31-ம் தேதி ஓய்வுபெறுவதையொட்டி அவருக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இவ்விழாவில், தமிழக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி, நீதிபதி வி.தன பாலனை வாழ்த்திப் பேசினார். அதையடுத்து நீதிபதி வி.தனபாலன் ஏற்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

150 ஆண்டுகள் பாரம்பரியமும், பெருமையும் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக 2005-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பதவியேற்றேன். இந்த நீதிமன்றம் செங்கற்களாலும், சிமென்ட் கலவையாலும் கட்டப்பட்ட கட்டி டத்தை குறிக்கவில்லை. மிகுந்த அர்ப்பணிப்பு, ஈடுபாடு, விடா முயற்சியுடன் பணியாற்றிய வழக் கறிஞர்கள், நீதிபதிகள், அவர்கள் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளைக் குறிக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பை ஒரு கண்ணோட்டமாக ஆய்வு செய்து நான் எழுதிய புத்தகம் டெல்லி யில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் வெளியிட, முதல் பிரதியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெற்றுக்கொண்டார். இதன் மூலம் எனது வாழ்நாள் கனவு நனவானது.

உயர் நீதிமன்றத்துக்கு பலரும் வருவார்கள், போவார்கள். ஆனால், இந்த நீதிமன்றம் என்றும் இருக்கும். அதன் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் நாம் எதுவும் செய்யக்கூடாது. நல்ல பெயர் எடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதை அழிப்பதற்கு ஒரு கணம் போதும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, நமது செயல்பாடுகளிலும், நடத்தை யிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த நீதிமன்றத்தால்தான் நமக்கு சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை எல்லாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால், சமுதாயத்தில் நாம் வெகுவாக பாதிக்கப்படுவோம். எனவே, நல்ல எதிர்காலத்தை பற்றி சிந்திப்போம். அதை நோக்கி பணியாற்றுவோம்.

நான் இங்கு ஒன்பதரை ஆண்டுகள் மனசாட்சிப்படியும், முழு திருப்தியுடனும் பணியாற்றி னேன். எனது பணியைத் திறம்பட செய்து முடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரி வித்துக்கொள்கிறேன். இனிமேல் இந்த நீதிமன்ற வழக்கு பட்டியலில் எனது பெயர் நீக்கப்பட்டாலும், உங்கள் மனதில் இருந்து என்னை நீக்கிவிடாதீர்கள் என்று உருக்கமாகப் பேசி முடித்தார் நீதிபதி பி.தனபாலன்.

இவ்விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், நீதிமன்றப் பணியாளர்கள், நீதி பதி தனபாலன் குடும்பத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நீதிபதி வி.தனபாலன் ஓய்வு பெற்றதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 39 ஆக குறைந்துள்ளது. நீதிபதி காலியிடங்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x