Published : 23 May 2015 08:08 AM
Last Updated : 23 May 2015 08:08 AM
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத் தில் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக ஜெயலலிதா ஒருமன தாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நடக்கும் பிரம்மாண்ட விழாவில் 5-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இதற்கிடையே, தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுதலை செய்து, கடந்த 11-ம் தேதி தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பையடுத்து முதல்வராக ஜெயலலிதா பொறுப் பேற்பதில் இருந்த சட்டப்பூர்வ தடைகள் நீங்கின. இதனால், அவர் மீண்டும் முதல்வராக பதவி யேற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.
எம்எல்ஏக்கள் கூட்டம்
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், நேற்று காலை 7 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது. காலை 5.30 மணி முதலே எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். 6.20 மணிக்கு கட்சியின் பொருளாளரும் முதல்வ ருமான ஓ.பன்னீர்செல்வம் வந்தார். சரியாக 7 மணிக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் தொடங்கியது. முதல் நிகழ்வாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
ஜெயலலிதாவுடன் சந்திப்பு
அதைத்தொடர்ந்து சட்டப் பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதாவை தேர்வு செய்வதற் கான தீர்மானத்தை ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். நத்தம் விஸ்வநாதன் வழிமொழிந்தார். பலத்த கரகோஷத்துக்கிடையே தீர்மானம் ஒருமனதாக நிறைவேற் றப்பட்டது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் 10 நிமிடங்களில் முடிந்தன.
பின்னர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனி யப்பன் ஆகியோர் போயஸ் தோட்டத்துக்கு சென்று ஜெயல லிதாவை சந்தித்தனர். சட்டப் பேரவை கட்சித் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கினர். 20 நிமிடம் ஜெயலலிதாவிடம் ஆலோசனை நடத்தினர்.
அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 பேரும் காலை 8 மணிக்கு ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் ரோசய்யாவை சந்தித் தனர். தனது ராஜினாமா கடிதத் தையும் சட்டப்பேரவை தலை வராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத் தையும் ஆளுநரிடம் பன்னீர் செல்வம் வழங்கினார்.
முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஆளுநர் உடனடி யாக ஏற்றுக்கொண்டார். புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் வரை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வழக்கம்போல செயல்படும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார். அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் குறித்த பட்டியலை விரை வில் அளிக்குமாறும் கோரினார்.
இதையடுத்து பிற்பகல் 1.28 மணிக்கு போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா, 2.03 மணிக்கு ராஜ்பவன் சென்றார். அவரை பூங்கொத்து கொடுத்து ஆளுநர் வரவேற்றார். அமைச் சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக் கப்பட்ட துறைகள் அடங்கிய பட்டியலை ஆளுநரிடம் ஜெயல லிதா அளித்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
புதிய அமைச்சரவை பதவி யேற்பு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டது. அதில் 23-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற் றாண்டு விழா அரங்கில் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் பல்கலைக்கழக அரங்கில் தீவிரமாக நடந்து வருகின்றன. இன்று காலை 11 மணிக்கு விழா தொடங்கு கிறது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அவரைத் தொடர்ந்து 28 அமைச்சர் களும் பதவியேற்கின்றனர்.
ஜேட்லி, ரவிசங்கர் பங்கேற்பு
பதவியேற்பு விழாவில் மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி, தகவல் தொடர்பு மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
விழாவையொட்டி, சென்னைப் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பகுதி முழுவதும் போலீஸா ரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.விழா முடிந்ததும் அங்கிருந்து தலைமைச் செயலகம் செல்லும் ஜெயலலிதா, தனது அறையில் முதல்வராக பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.
144 எம்எல்ஏக்கள் பங்கேற்பு
முன்னதாக நேற்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அதிமுகவின் 144 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் ராஜினாமா செய்த தால் அந்த இடம் காலியாக உள்ளது. தற்போது சட்டப்பேரவையில் அதிமுக பலம் 151 ஆக உள்ளது. (இதில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட சமக-2, இந்திய குடியரசு-1, கொங்கு இளைஞர் பேரவை-1 உட்பட). விதிமுறைப்படி பேரவைத் தலைவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தூர் பாண்டியன், சிறையில் இருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் பங்கேற்கவில்லை.
தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் 8 பேரில் சுந்தர் ராஜன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், அருண் சுப்ரமணியன், சுரேஷ்குமார், சாந்தி, பாண்டிய ராஜன் ஆகிய 7 பேரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். நடிகர் அருண்பாண்டியன் வரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT