Published : 22 May 2015 01:11 PM
Last Updated : 22 May 2015 01:11 PM

மதுரை மாநகாரட்சிப் பள்ளிகளில் ஏழ்மையை வென்ற மாணவிகள்

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 6 மாணவிகள் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளிகள் என்றாலே புறந்தள்ளும் நிலை இருந்தது. ஆனால் இன்று அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளாலும் அதிக மதிப்பெண்கள் பெற முடியுமென நிரூபித்து வருகின்றனர். 496 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்றுள்ள விசித்ரா கணிதம், அறிவியல், சமூக அறிவியலில் சென்டம் எடுத்துள்ளார். இவர் மணிநகரம் கனகவேல் காலனியைச் சேர்ந்தவர். இவரது தாய் ரோகிணி. தந்தை குருநாதன் வேன் டிரைவர். எதிர்காலத்தில் விவசாய தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டதாரியாக வேண்டும் என்பது இவரது விருப்பம்.

492 மதிப்பெண் பெற்று மாநகராட்சி பள்ளிகள் அளவில் 2-வது இடம் பெற்றுள்ள மாணவி ஐஸ்வர்யா வில்லாபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர். இவரும் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் சென்டம் எடுத்துள்ளார். தந்தை சங்கர், தாய் ஜெயந்தி ஆகியோர் வீட்டிலேயே நூல்கண்டு தயாரித்து விற்பனை செய்து, அந்த பணத்தில் பிழைப்பு நடத்தி வருகின்றனர். வீட்டில் மிகவும் வறுமையான சூழல் நிலவுவதாக கூறும் ஐஸ்வர்யா, எதிர்காலத்தில் மருத்துவராக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

492 மதிப்பெண்ணுடன் இரண்டாமிடத்தை பகிர்ந்து கொண்டுள்ள மற்றொரு மாண வியான ஷிவானி, வில்லாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்தவர். இவரது தந்தை ரவீந்திரன் இரும்பு கம்பெனியில் தொழிலாளியாக உள்ளார். தாய் மகாலெட்சுமி டைல்ஸ் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஷிவானி எதிர்காலத்தில் மருத்துவராக விரும்புகிறார்.

பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள கடையில் டீ மாஸ்டராக உள்ள முருகனின் மகள் ராகவி, ஆரப்பாளையத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரர் கனகரா ஜ் மகள் அன்புச்செல்வி, மில் தொழிலாளியின் மகள் கோடீஸ்வரி, ஆகியோர் 3-வது இடத்தை பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து மாநகராட்சி பள்ளியிலேயே படிக்க விரும்புவதாக தெரிவித் துள்ளனர். இதேபோல் மாநகரா ட்சி பள்ளிகளில் படித்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் 400 மதிப் பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x