Published : 09 May 2014 02:47 PM
Last Updated : 09 May 2014 02:47 PM
புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 89.61% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். மாணவர் முகமது ஜாவீது முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதமாக பகல் 11.35-க்கே வெளியிடப்பட்டன. தேர்ச்சி சதவீதம் 89.61 ஆகும். இது கடந்தாண்டை அதிகம்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 13 ஆயிரத்து 477 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 12 ஆயிரத்து 77 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.61 சதவீதமாகும். இதில் மாணவர்கள் 86.12 சதவீதமும், மாணவிகள் 92.48 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி மாநில அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதலிடத்தை பிரிம்ரோஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகமது ஜாவீது 1,191 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். 2-ம் இடத்தை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் ஆனந்தவேல் 1,187 மதிப்பெண் பெற்றும், 3-ம் இடத்தை காரைக்கால் நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹமீத்நஸீரா 1,186 மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்தனர்.
புதுச்சேரி மாநில அளவில் அரசு பள்ளிகளில் முதல் 10 இடங்களையும் காரைக்காலை சேர்ந்த மாணவர்களே பிடித்தனர்.
தாமதம்:
புதுச்சேரியில் தேர்வு முடிவுகள் பகல் 11.30 மணிக்குதான் வெளியிடப்பட்டன. தமிழகத்திலிருந்து காலை 10 மணிக்குதான் இணையத்தின் மூலம் கிடைத்தது. அதையடுத்துதான் தேர்வு முடிவுகளை பிரித்து வெளியிடுகிறோம். அதனால்தான் இத்தாமதம்.
புதுச்சேரி தரப்பிலிருந்து தமிழக அதிகாரிகளிடம் பலமுறைபேசினோம். அமைச்சர் தரப்பிலும் பேசி பலனில்லை என தேர்வுத்துறை இயக்குநர் வல்லவன் குறிப்பிட்டார். அத்துடன் தேர்தல் நெறிமுறை இருப்பதால் தேர்வு முடிவுகள் தொடர்பாக அவர் பேட்டியளிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT