Published : 27 May 2015 11:55 AM
Last Updated : 27 May 2015 11:55 AM
கிருஷ்ணகிரியில் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழும் பன்னியாண்டி (எஸ்.சி) பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சாதிச் சான்றிதழ் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகக் கூறி கோட்டாட்சியர் அலுவலகம் முன்னர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, "22010-ம் ஆண்டு முதல் தங்கள் சமூகத்தினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்க அரசு எந்த விதிகளையும் கடைபிடிக்க மறுக்கிறது.
இதனால், 10-வது மற்றும் 11, 12-வது படிக்கும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சாதிச்சான்றுகள் வழங்கிட வருவாய் அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.
இப்பிரச்சினை தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்தையும், வட்டாட்சியர்களையும் அணுகி தீர்வு கிடைக்கவில்லை.
எனவே, இன்று காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT