Last Updated : 02 May, 2014 09:45 AM

 

Published : 02 May 2014 09:45 AM
Last Updated : 02 May 2014 09:45 AM

சமூக வலைத்தளங்களில் பரவும் அச்சுறுத்தல்கள்: நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது காவல்துறை

பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங் கள் அல்லது குண்டு வெடிப்பு, விமானக் கடத்தல் போன்றவை நிகழும் போதெல்லாம் பேஸ்புக், டிவிட்டர் ஆகிய சமூக வலைத் தளங்களின் மூலம் ஏராளமானோர் தகவல்களை தெரிந்துகொள்கின் றனர். எல்லோரும் இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்த லாம் என்ற காரணத்தால், இதை அதிகளவில் பொது மக்கள் பயன் படுத்தி தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், பல நேரங்களில் இந்த சமூக வலைத்தளங்களில் கிடைக் கும் தகவல்கள் உண்மையாக இருப்பதில்லை. உதாரணமாக, வியாழக்கிழமை சென்னையில் நடந்த ரயில் குண்டுவெடிப்பு பற்றி முதலில் கிடைத்த தகவல், 2 ரயில் கள் மோதிக் கொண்டன என்பது தான். பிறகு, 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் பரவின. ஆனால், உண்மையில் உயிரிழந்தது ஒருவர் மட்டுமே.

இது போன்ற தகவல்கள் தீப் போல் பரவுவதால், மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த தகவல்கள் யாராலும் சரிபார்த்து அனுப்பப்படுவதில்லை. கிடைக்கும் தகவல்களை பிறருக்கு உடனே பரிமாறிக் கொள்வதில் மட்டுமே ஆர்வம் காட்டப்படுகிறது. பிறருக்கு எச்சரிக்கை அளிக்க வேண்டும் என்பது நோக்கமாக்க இருந்தால், மக்களை பீதியடையச் செய்யும் தகவல்களை அனுப்ப மாட்டார்கள்.

இது குறித்து, இணையதளம் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் ஆய்வாளர் அன்பரசன் கூறியதாவது:

சமூக வலைத்தளங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க தனி யாக குழு ஒன்று உள்ளது. தவறான தகவல்கள் ஏதேனும் பகிரப்பட் டிருந்தால், அவர்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு விளக்கம் அளிப்பார்கள். அதாவது, அவர் பதிவு செய்த தகவல் எதனால் தவறானது, சரியான தகவல் என்ன என்பது அந்த நபருக்கு சமூக வலைத்தளத்தின் மூலமே தெரிவிக்கப்படும். இந்த விளக்கத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டு, இது போன்று தகவல்களை மேலும் பதிவிடாமல் இருக்க வேண்டும். ஆனால், மீறி அவர்கள் பதிவு செய்தால், அவர் கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இதை முன்கூட்டியே தவிர்ப்பதற்கு வாய்ப்பில்லை.

பொது மக்கள் யாராவது இது போன்ற தகவல்களை கண்டறிந் தால், எங்களிடம் புகார் அளிக்க லாம். தமிழ்நாடு காவல்துறை வலைத்தளத்தில் (http://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?1) இணையதள புகார்கள் என்று குறிப்பிட்டு புகார்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x