Published : 12 May 2015 10:37 AM
Last Updated : 12 May 2015 10:37 AM

பிச்சை எடுத்த பணத்தில் உருவாக்கிய 3 கிணறுகள்: உணவளித்த மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்திய பிச்சைக்காரர்

தனக்கு உணவளித்த கிராம மக்களுக்காக, தான் பிச்சை எடுத்து சேமித்த பணத்தில் கிராம மக்களின் தண்ணீர் தேவையைத் தீர்க்க சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் 3 கிணறுகளை வெட்டித்தந்து, நன்றிக் கடனுக்கு உதாரணமாகத் திகழ்ந்துள்ளார் முத்து என்பவர்.

திருச்சி- கல்லணை சாலையில் காவிரி ஆற்றின் வடக்கு கரையை யொட்டி அமைந்துள்ளது திருவளர் ச்சோலை கிராமம். தற்போது இந்தப் பகுதி திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்தில் விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள், கட்டு மானத் தொழிலாளர்கள் என கூலித் தொழிலாளர்களே அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

இந்தக் கிராமத்தில் 1920-களில் வாழ்ந்த மக்கள், தங்களது குடிநீர் மற்றும் தண்ணீர் தேவைக்கு காவிரி ஆற்றையே நம்பியிருந்துள் ளனர். தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலை வில் உள்ள காவிரி ஆற்றுக்குச் சென்று ஆண்களும், பெண்களும் தண்ணீரைக் கொண்டுவந்து தங்களது வீடுகளில் குடிக்கவும், பிற தேவைகளுக்காகவும் பயன் படுத்தி வந்ததுள்ளனர்.

அந்த நேரத்தில் இந்த ஊரில் முத்து என்பவர் பல வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் உணவை உட்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்தப் பகுதியிலேயே சுற்றி வந்து கொண் டிருந்த முத்து, தண்ணீருக்காக மக்கள் படும் கஷ்டத்தைக் கண்டு, திருவளர்ச்சோலை பகுதியில் கிணறுகளை அமைக்கத் திட்டமிட் டார்.

இதைத்தொடர்ந்து, முத்து தான் பிச்சை எடுத்து சேமித்து வைத்திருந்த ரூ.400-ஐக் கொண்டு திருவளர்ச்சோலையில் சாவடி (தெற்கு தெரு) மற்றும் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் இரு தெருக்கள் என மொத்தம் 3 இடங்களில் உறை கிணறுகளை அமைத்துள்ளார். இந்த கிணறுகளை மக்கள் பயன்படுத்தி தங்களது தண்ணீர் தேவைகளை அப்போது பூர்த்தி செய்துகொண்டனர்.

இந்தநிலையில் 2.1.1927-ல் முத்து இறந்தார். இவரது நினை வாக திருவளர்ச்சோலை சாவடி பகுதியில் முத்து அமைத்த கிணற் றின் சுற்றுச்சுவரிலேயே 11.10.1929-ல் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது. அந்த கல்வெட்டில், ’திருவளர்ச் சோலையில் பிச்சை எடுத்து சாப்பிட்டு ரூ.400 செலவு செய்து 3 இடங்களில் கிணறு வெட்டிய முத்துவின் தர்மப் பணியின் ஞாபகார்த்தமாக இந்த கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது இது ஸ்ரீரங்கம் ரிஜிஸ்தர் ஆபிஸில்1929-ம் ஆண்டில் ரிஜிஸ்தர் செய்யப்பட்டது’ என ஆங்கிலத்திலும், தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவளர்ச் சோலைத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பி.கோவிந்தன்(70), ‘தி இந்து’விடம் கூறியபோது, “அந்தக் காலத்தில் ஏராளமான நிலபுலன்களுடன் வசதியாக வாழ்ந்து வந்தவர்கள்கூட செய்யாத காரியத்தை முத்து செய்துள்ளார். பிச்சை எடுத்தாலும், அந்த பணத்தில் மக்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் கிணறுகளை வெட்டித் தந்துள்ளார்.

இந்தக் கல்வெட்டு காலப் போக்கில் உடைந்துவிட்டது. இருப் பினும் அதை சாவடி பகுதியில் உள்ள கோயில் வாகன மண்டபத் தில் பதித்து பாதுகாத்து வருகி றோம். பல ஆண்டுகள் இந்த கிணற்றை பயன்படுத்தி வந்த மக்கள், தற்போது வீடுகள்தோறும் மோட்டார் பம்புகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் கிணறுகளைப் பயன்படுத்தவில்லை” என்றார்.

பணம் உள்ள பலருக்கு மனம் இருக்காது என்பார்கள். ஆனால், தான் பிச்சை எடுத்து சேமித்த பணத்தில் கிராம மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற முயற்சிசெய்து, அதில் வெற்றி கண்ட முத்துவின் செயல் உண்மையில் போற்றப்பட வேண்டியதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x