Published : 16 May 2014 03:34 PM
Last Updated : 16 May 2014 03:34 PM

மக்கள் தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம்: வைகோ கருத்து

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் மக்கள் தீர்ப்பை ஏற்பது தான் ஜனநாயகம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "அகில இந்திய அளவில் நரேந்திர மோடி ஆதரவு பேரலை மிகப் பெரும்பான்மையான மாநிலங்களில் வீசியதால் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரமிக்கத்தக்க மகத்தான வெற்றி பெறவும் வாக்காளப் பெருமக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று பிரதமர் பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் வாக்காளப் பெருமக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஊழலற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்கவும், தன்னலமற்ற மக்கள் பொதுத்தொண்டை முன்னெடுக்கவும் உறுதிகொண்டு தொடர்ந்து பாடுபடும்". இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x