Published : 04 May 2015 03:53 PM
Last Updated : 04 May 2015 03:53 PM
கிருஷ்ணகிரி அருகே நகை அடகு கடையில் உரிமையாளரை தாக்கி கொள்ளை முயற்சி ஈடுபட்ட கொள்யைர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது குருபரப்பள்ளி கிராமம்.
இந்த கிராமத்தில் இருந்து நடுசாலை செல்லும் வழியில் வசித்து வருபவர் மணிவாசகம்(45). இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் சுற்றுச்சுவர் கேட்டை பூட்டிவிட்டு வீட்டிற்குள் செல்ல நடந்த வந்தார். கேட்டிற்கு வீட்டிற்கு சுமார் 50 அடி தூரம் இருக்கும்.
அப்போது, அங்கு மறைந்திருந்த 3 முகமூடி அணிந்திருந்த கொள்யைர்கள் மணிவாசகத்தை சுற்றி வளைத்து கத்தி முனையில் வீட்டு கதவை திறக்க கூறி மிரட்டினார்.
வீட்டுக்குள் கல்பனா மற்றும் அவரது குழந்தைகள் இருந்தனர். மணிவாசகம் கதவை திறக்க வேண்டாம் என கூச்சலிட்டார். அதற்கு வீட்டிக்குள் இருந்தவர்கள் அலாரத்தையும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க வைத்திருந்த மைக் மூலம் திருடன், திருடன் என கூச்சலிட்டனர். இதில் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் மணிவாசகத்தை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்த தப்பியோடினர்.
அதனை தொடர்ந்து வீட்டுக்குள் இருந்த வெளியே வந்த கல்பனா மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த மணிவாசகத்தை மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்த கிருஷ்ணகிரி எஸ்பி கண்ணம்மாள், டிஎஸ்பி சந்தானபாண்டியன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தடவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் கொண்டு தடயங்கள் சேகரிப்பட்டது. கொள்ளை சம்பவம் நகை அடகு கடை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சுற்றியும் மாந்தோப்பும், சிறிது தூரத்தில் டாஸ்மாக் கடையும் உள்ளது. நீண்ட நாட்களாக நோட்டமிட்ட கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
கொள்ளை முயற்சி நடந்த நகை அடகு கடையின் உள்ளே 4 சிசிடிவி கேமிராக்களும், சுற்றுச்சுவருக்குள் 2 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், விபத்து மற்றும் இது போன்ற கொள்ளை முயற்சிகள் நடக்கும் சமயங்கள் விழிப்புணர்வுடன் மக்களுக்கு தெரிவித்து உதவியை நாடும் வகையில் மைக் மூலம் எச்சரிக்கை வகையில் அமைத்துள்ளனர். இதன் காரணமாகவே பெரிய அளவிலான கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குந்தாரப்பள்ளி தேசிய வங்கியில் 6038 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது. வங்கி அமைந்துள்ள பகுதியில் மக்கள் நடமாட்டம், குடியிருப்புகள் நிறைந்து காணப்பட்டாலும், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே கொள்ளை சம்பவம் நடந்தது. வங்கிகள், நகைக்கடைகள், அடமான கடைகளில் சிசிடிவி கேமிரா, பொது எச்சரிக்கை அறிவிப்பு மைக், ஆகியவற்றை பொருத்த வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT