Published : 28 May 2015 08:02 AM
Last Updated : 28 May 2015 08:02 AM

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட சான்றிதழ்கள் வாங்க இயலாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு: தபால் மூலம் தனியாக அனுப்பலாம்

பொறியியல் படிப்புக்கு விண் ணப்பிக்க நாளை (மே 29) கடைசி நாள் ஆகும். இந்த நிலை யில் விண்ணப்பம் பெற்றும் குறிப்பிட்ட சான்றிதழ்களை வாங்க இயலாத மாணவர் கள் கடைசி தேதிக்குள் விண் ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு, பின்னர், விடுபட்ட சான்றிதழ் களின் நகலை தபால் மூலம் தனியாக அனுப்பலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து 5 ஆண்டுகள் பிற மாநிலங்களில் படித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கள் நிரந்தர இருப்பிடச் சான் றிதழ் (நேட்டிவிட்டி சர்டிஃபி கேட்) சமர்ப்பிக்க வேண்டும்.

இதேபோல், குடும்பத்தில் இதுவரை யாருமே பட்டப் படிப்பு படிக்காமல் முதல்முறை யாக கல்லூரிக்கு அடியெடுக் கும் மாணவர்கள் முதல் தலை முறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் அவர்களுக்கு கல்விக் கட்டணத் தில் சலுகை கிடைக்கும்.

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் வாங்கிய சில மாணவர்கள் மேற்கண்ட சான்றிதழ்களை இன்னும் வாங்க இயலாத காரணத்தால், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாமல் சிரமப்படுவது தெரியவந்துள்ளது. இது தொடர் பாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதல் தலைமுறை பட்ட தாரி சான்றிதழ், நிரந்தர இருப் பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் மதிப் பெண் சான்றிதழ் வாங்காத மாணவர்கள் அதற்காக காத் திருக்காமல் பொறியியல் விண் ணப்பத்தை கடைசி தேதியான 29-ம் தேதிக்குள் (வெள்ளிக் கிழமை) சமர்ப்பித்துவிட வேண் டும். சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் கைக்கு கிடைத்தவுடன் அவற்றின் நகல் களை தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு ஒரு விளக்கக் கடிதத்துடன் “செய லாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600 025” என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு அறி வுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x