Published : 15 May 2014 12:00 AM
Last Updated : 15 May 2014 12:00 AM

50 சதவீத காஸ் ஆட்டோக்கள் மீண்டும் பெட்ரோலுக்கு மாறிய அவலம்- காஸ் விநியோகத்தில் தட்டுப்பாடு என புகார்

சென்னையில் ஆட்டோவுக்கான காஸ் விநியோகம் போதிய அளவில் இல்லாததால், 50 சதவீத ஆட்டோக்கள் மீண்டும் பெட்ரோலுக்கே மாறியுள்ளன. எனவே, தட்டுப்பாடின்றி காஸ் விநியோகம் செய்ய மையங்களை அதிகரிக்க வேண்டுமென ஆட்டோ தொழிலாளர்கள் தெரிவித்துள் ளனர்.

சென்னையில் தற்போது 22 ஆட்டோ காஸ் விற்பனை மையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. ஆனால், இங்கு இயக்கப்படும் 72 ஆயிரம் ஆட்டோக்களில், 40 ஆயிரம் ஆட்டோக்கள் காஸ் மூலம் இயங்கக் கூடியவை. ஏராள

மான கார்களும் தற்போது பெட் ரோலை தவிர்த்து காஸுக்கு மாறி வருகின்றன.

ஆனால், போதிய அளவில் காஸ் நிரப்பும் மையங்கள் இல்லாததால், பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காஸ் நிரப்பிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இதனால், 50 சதவீத காஸ் ஆட்டோக்கள் மீண்டும் பெட்ரோலுக்கே மாறியுள்ளன.

இது தொடர்பாக ஆட்டோ ஓட்டும் டி.ராமமூர்த்தி, என்.வெங்கடேஷ் ஆகியோரிடம் கேட்டபோது:

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருக்காது, எரிபொருள் செலவும் குறையும் என்பதற்காகவே காஸ் மூலம் இயங்கும் ஆட்டோக்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இப்போது பெட்ரோலுக்கு நிகராக, ஆட்டோ காஸ் விலையும் உயர்ந்துள்ளது. இதுதவிர, காஸ் ஆட்டோக்களின் இன்ஜினில் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்த் தப்படும்போது அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ஆனால், ஆட்டோ காஸ் விலை எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென உயர்த்தப்படுகிறது. ஒரு கிலோ ஆட்டோ காஸ் விலை ரூ.33 ஆக இருந்தது. இப்போது ஏறத்தாழ ரூ.60 ஆகிவிட்டது.

இதனால், எங்களுக்கு கட்டுப் படியாகவில்லை. எனவே, நாங்கள் மீண்டும் பெட்ரோ லுக்கே மாறி விட்டோம். எங்களைப் போல், 50 சதவீத பேர் மாறிவிட்டனர்.

காஸ் ஆட்டோக்களை இயக்க வேண்டு மென்றால் காஸ் மையங்களை அதிகரிக்க வேண்டும்; விலையை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது காஸ் ஆட்டோக்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்றனர்.

இது தொடர்பாக போக்குவரத் துத் துறை ஆணையரக அதிகாரிக ளிடம் கேட்டபோது, ‘‘சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கூடுதலாக காஸ் மையங்களை அமைக்க எண்ணெய் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் பல்வேறு பகுதிகளில் காஸ் மையங்கள் திறக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x