Published : 07 May 2015 08:01 AM
Last Updated : 07 May 2015 08:01 AM
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு 150 ஆண்டுகளாகின்றன. இதை யொட்டி தமிழகத்தின் பழமையான 8 நகராட்சிகள் நடப்பாண்டு 150-ம் ஆண்டில் நுழைகின்றன.
தமிழகத்தில் தற்போது 124 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இது தமி ழக மக்கள் தொகையில் 15 சதவீதத்துக்கும் அதிகமாகும். வரி வசூல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பிரிட்டிஷார் 1865-ம் ஆண்டு நகர அபிவிருத்தி சட்டத்தைக் கொண்டு வந்தனர். அந்த சட்டத்தின்கீழ் தமிழகத்தில் 1866-ம் ஆண்டில் தற்போது மாநக ராட்சிகளாக உள்ள மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல் வேலி, வேலூர், தூத்துக்குடி, தஞ் சாவூர் மற்றும் நகராட்சிகளாக தொடரும் கும்பகோணம், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, மன்னார் குடி, கடலூர், காஞ்சிபுரம், ஊட்டி, குன்னூர் ஆகியவை நக ராட்சிகளாக உருவாக்கப்பட்டன.
மக்கள்தொகை பெருக்கம், நகர எல்லை விரிவாக்கம், வருமான உயர்வு ஆகியவற்றின் காரணமாக மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய 8 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுவிட்டன. கும்ப கோணம், நாகப்பட்டினம், மயிலாடு துறை, மன்னார்குடி, கடலூர், காஞ்சிபுரம், ஊட்டி, குன்னூர் ஆகிய 8 நகராட்சிகள் நடப்பாண்டு 150-ம் ஆண்டில் நுழைகின்றன.
தொடக்கத்தில் வரி வசூலில் மட்டுமே ஈடுபட்டு வந்த நகராட்சி நிர்வாகங்கள் அதன்பின் சுகா தாரம் மற்றும் குடிநீர் வழங்கு தல் உள்ளிட்ட மக்கள் நலம் தொடர்பான பல்வேறு பணி களை மேற்கொண்டு வரு கின்றன. அதன்பின் மக்கள் தொகை, பரப்பளவு, வரு மானம் அடிப்படையில் பல நகராட்சிகள் உருவாக்கப்பட்டன. 20 ஆயிரத்துக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட உள்ளாட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப் பட்டு வந்த நிலையில் 2004-ம் ஆண்டு முதல் 30 ஆயிரத் துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட உள்ளாட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப் படுகின்றன.
செங்கல்பட்டு, வேலூர், சேலம், திருப்பூர், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 7 மண்டலங்களின் கீழ் 124 நகராட்சிகளும் நிர்வகிக்கப் பட்டு வருகின்றன.
வருமானத்தின் அடிப்படையில் சிறப்புநிலை, தேர்வுநிலை, முதல் நிலை, 2-ம் நிலை என 4 பிரிவுக ளாக நகராட்சிகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
மாநகராட்சிகளையொட்டி வளர்ந்துவரும் நகராட்சிகள் காலப் போக்கில் மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்டுவிடுகின்றன. பெரிய, பழமையான நகராட்சி களையொட்டி வளர்ந்துவரும் நகராட்சிகள் அவற்றுடன் இணைக் கப்பட்டு மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. அருகருகே உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நகராட்சியாக எல்லை விரி வாக்கம் செய்யப்படுகின்றன. மக்கள்தொகை, பரப்பளவு வரு மானம் அடிப்படையில் அவ்வப் போது புதிய நகராட்சிகள் உருவாக் கப்படுகின்றன.
தமிழகத்தின் நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு 150 ஆண்டுகளாவது குறித்து தஞ்சை நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குநர் சாந்தி கூறியபோது, “கும்பகோணம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளின் 150-ம் ஆண்டு விழாவையொட்டி நினைவு வளைவுகள் அமைக்கவும், அந்த நகராட்சிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கக் கோரியும் முன்மொழிவுகள் வந்துள்ளன” என்றார்.
2004-ம் ஆண்டு முதல் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உள்ளாட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT