Published : 11 May 2014 10:00 AM
Last Updated : 11 May 2014 10:00 AM

ஜல்லிக்கட்டு தடையால் அலங்காநல்லூரில் கடையடைப்பு: காளைகளின் கொம்புகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு

ஜல்லிக்கட்டு மீதான தடையைக் கண்டித்தும், அதனை மேல் முறையீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் அலங்காநல்லூரில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. காளைகளின் கொம்புகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. தடை உத்தரவை மேல் முறையீடு செய்து, மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத்தர வேண்டுமென வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர், ஜல்லிக்கட்டு ஆர்வ லர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்திவந்த பால மேடு, சூரியூர் உள்பட பல கிராமங்களில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூரில் சனிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அங்குள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வீடுகள், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

இதுதவிர காளைகளின் கொம்புகளில் கருப்புக்கொடியைக் கட்டி, ஊர்வலமாக அழைத்து வந்து ஜல்லிக்கட்டு மைதானத்தின் வாடி வாசல் முன் வரிசையாகக் கட்டி வைத்தனர்.

பின்னர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அங்கு திரண்டு, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அழிக்க நினைப்போரைக் கண்டித்தும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மேல்முறையீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் முழக் கங்கள் எழுப்பினர்.

இந்த கடையடைப்புப் போராட் டத்தால் அலங் காநல்லூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x