Published : 26 May 2015 07:21 AM
Last Updated : 26 May 2015 07:21 AM

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வித்யா விகாஸ் பள்ளிகள் சாதனை

வித்யா விகாஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் பல்வேறு சிறப்பிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

காரமடை வித்யா விகாஸ் பள்ளி மாணவி கே.எஸ்.கீர்த்திகா 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடமும், எம்.திர்ணா, ஏ.எஸ்.மினு ஆகியோர் 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-ம் இடமும், கவிசந்திர காந்த் 497 மதிப்பெண்களுடன் பள்ளியில் மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவிகள் அ.அமிர்த லட்சுமி, மு.தர்சனா ஆகியோர் 496 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடமும், ம.துர்கா, மு.ஜீவிதா, பா.சிவரஞ்சனி, செ.கோகுலவாசன், கோ.ஹரி ஹரன் ஆகியோர் 495 மதிப் பெண்களுடன் 2-ம் இடமும், வி.சாலினி, மு.பிரதீப், எஸ்.நவீன் பிரசாந்த் ஆகியோர் 494 மதிப்பெண்களுடன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.

கந்தர்வக்கோட்டை வித்யா விகாஸ் பள்ளி மாணவிகள் எம்.சுவேதா (496) பள்ளியில் முதலிட மும், எ.விசால் ஆகாஷ்(495) இரண்டாமிடமும், பி.ஜீவிதா, தோஷிபா, எம்.முகமது அனாஸ் (496) ஆகியோர் மூன்றாமிடமும் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களை ஆசிரியர்கள், வித்யா விகாஸ் கல்வி நிறுவன மேலாண்மை இயக்குநர் எஸ்.குணசேகரன், தாளாளர் டி.ஓ.சிங்காரவேல், மேலாண்மை இயக்குநர்கள் எஸ்.இராமலிங்கம், எம்.முத்துசாமி, இயக்குநர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி கே.எஸ்.பழனியப்பன், இயக்குநர்கள் டி.பி.ஞானசேகர், ஆர்.சுரேஷ்குமார், டி.ராஜு, ஆர்.சசிராஜ்குமார், எம்.அழகர்சாமி, என்.சீராளன், பாஸ்கர், கார்த்தி கேயன், தலைமை ஆசிரியர் எஸ்.நாராயணமூர்த்தி, தலைமை ஆசிரியை ஒய்.மேகலா ஆகியோர் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x