Published : 25 May 2015 10:28 AM
Last Updated : 25 May 2015 10:28 AM

மதுவிலக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜுன் 5-ல் ஆர்ப்பாட்டம்: தமாகா முதல் செயற்குழுவில் தீர்மானம்

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு வரும் ஜூன் 5-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமாகா செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமாகா முதல் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென் னையில் நேற்று நடைபெற்றது.

துணைத் தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத் தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

காமராஜர் ஆட்சியில் பூரண மதுவிலக்கு இருந்ததால் தமிழகம் பல துறைகளில் வளர்ச்சி அடைந்தது. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் மது விற் பனை அனுமதிக்கப்பட்டதால் தமிழகம் பின்தங்கியிருக்கிறது. மது விற்பனையை அதிகப்படுத்த அதிகாரிகள் கட்டாயப்படுத் துவதால் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ. 26 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு, மது விற்பனை வருவாயை பெருமளவு நம்பி ஆட்சியை நடத்துவது வேதனை அளிக்கிறது. எனவே, தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண் டும். இதனை வலியுறுத்தி வரும் ஜூன் 5-ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வளர்ச்சிப் பணிகள் முடக்கம்

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொண்டு வந்த ரஷ்ய நிறுவனம் பணியை பாதியில் நிறுத்தி விட்டு சென்றுவிட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. உரிய காலத்தில் மெட்ரோ ரயில் பணிகளை முடித்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.

பாஜக அரசுக்கு கண்டனம்

கடந்த ஓராண்டு காலமாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஊழலை ஒழிப்போம் என்றவர்கள் லோக்பால் நீதிமன்றத்தைக்கூட அமைக்கவில்லை. இனியாவது வளர்ச்சிப் பணிகளில் பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்களில் நடக்கும் கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காமராஜரின் பிறந்த நாளான வரும் ஜூலை 15-ம் தேதி தஞ்சாவூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்து வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x