Published : 09 Mar 2014 10:02 AM
Last Updated : 09 Mar 2014 10:02 AM
இடதுசாரி கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்து, டெல்லி மேலிட நிர்வாகிகள் மூலம், திமுக தலைமை பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வரும் பிரகாஷ் காரத்தை சந்திக்கவும், திமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்படாததால், மகிழ்ச்சியாகப் பிரிவோம் என்று சொல்லி இடதுசாரிக் கட்சிகளின் கூட்ட ணியை அதிமுக முறித்துக் கொண்டது. இதையடுத்து கூட்ட ணியா, தனித்து போட்டியா என்பதை கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் முடிவு செய்யவில்லை. இதற்கிடையில், இடதுசாரி கட்சி களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது திமுக.
கி.வீரமணி, திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோர் மூலம் இடதுசாரிகளுக்கு தூது அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக. மேலும் டி.ஆர்.பாலுவை டெல்லிக்கு அனுப்பி, அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மூலம் டெல்லி மேலிட நிர்வாகிகளுடனும் பேச்சுவார்த்தையைத் தொடங்கி யுள்ளது.
இதேபோல், நாகை மாவட்டம் கீழ வெண்மணியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கான நினைவகத்தை ஞாயிற்றுக்கிழமை திறக்கவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தை நேரில் சந்தித்துப் பேசவும் திமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், சனிக்கிழமை டெல்லியில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உயர்மட்டக் கூட்டத்திலும் சென்னையில் நடந்த செயற்குழுக் கூட்டத்திலும் தமிழக கூட்டணி நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 11-ம் தேதி சென்னை யில் நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கிறது இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி.
இதேபோல், மார்க்சிஸ்ட் கட்சியும் மேலிடத்தில் ஆலோ சனை நடத்தி வருகிறது. இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி கள், வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் சென்னையில் கூட்டாக கூடி ஆலோசனை நடத்து கின்றனர். அதன் பிறகு தங்களது முடிவை அறிவிப்பதாக கம்யூ னிஸ்ட் கட்சிகள் திமுக-விடம் தெரிவித்துள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை திமுக சம்பந்தப்பட்ட 2 ஜி வழக்கை கடுமையாக விமர்சித்து வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், மதச்சார்பற்ற கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணிக்கு வரலாம் என திமுக-வில் எதிர்பார்த்துள்ளனர். மேலும், இடதுசாரிகள் தங்கள் கூட்டணிக்கு வந்தால், காங்கிரஸ் இல்லாமலேயே வலுவான அணியை அமைக்கலாம் என திமுக திட்டமிடுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT