Published : 29 May 2015 09:00 AM
Last Updated : 29 May 2015 09:00 AM

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தரப்பட்டியலில் 7-ம் இடம்

அண்ணா பல்கலைக்கழக தரப் பட்டியலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல் லூரி மாநில அளவில் 7-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த இரு பருவங்களில் நடை பெற்ற பல்கலைக்கழக தேர்வு களில் மாணவர்களின் தேர்ச்சி சதவீத அடிப்படையில் தனது உறுப்பு கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2014 ஏப்ரல்/மே பல்கலைக்கழக தேர்வுகளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி 89.23 தேர்ச்சி வீதம் பெற்று மாநிலத்தில் 7-வது இடத்தையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 3-வது இடத்தை யும் பெற்றுள்ளது.

2013 ஏப்ரல்/மே பல்கலைக் கழக தேர்வுகளில் அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 90.29 தேர்ச்சி வீதம் பெற்று மாநில அளவில் இரண்டாவது இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் இக்கல்லூரி சராசரியாக 90-க்கும் மேற்பட்ட தேர்ச்சி வீதத்துடன் மாநிலத்தில் முதல் 10 இடங்களில் இடம்பெறுகிறது.

மாணவர்களின் கல்வி முன் னேற்றத்துக்கு கடுமையாக உழைத்த பேராசிரியர்களை கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில் குமார் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x