Last Updated : 12 May, 2015 09:14 AM

 

Published : 12 May 2015 09:14 AM
Last Updated : 12 May 2015 09:14 AM

விடுதலை பெற்றுத் தந்த கிருஷ்ணானந்த் வழக்கு

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற அடிப்படை காரணமாக கிருஷ்ணானந்த் வழக்கு அமைந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வருமான வரித்துறை அதிகாரியாக இருந்தவர் கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி. அரசு ஊழியரான இவர் பதவியில் இருந்த 29.11.1949 முதல் 1.1.1962 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இவர் பதவியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1,27,715.43 சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அவரது தண் டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

கிருஷ்ணானந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.குப்தா, பி.பாகவதி, பி.சிங்கால் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் முன் வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில் கிருஷ்ணானந்தின் முறையான சொத்து மற்றும் வருமானம் கணக்கில் எடுக்கப் பட்டது. இதுபோக, அவரிடம் கூடுதலாக இருந்த சொத்து மற்றும் பணம் மிக சொற்பமானது என்று நீதிபதிகள் முடிவுக்கு வந்தனர்.

அவர் கூடுதலாக வைத்திருந்த சொத்து, அரசு தரப்பு குற்றம்சாட்டிய ரூ.1,27,715.43 தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. ஆந்திர மாநில அரசு பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில், சொத்து குவிப்பு குற்றச்சாட்டை பொறுத்தமட்டில், 20 சதவீதம் வரை கூடுதலாக இருப்பதை அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, 10 சதவீதத்துக்கும் குறைவான அளவில் கூடுதல் சொத்து இருப்பதால் அவரை தண்டிக்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தனர். உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 17.12.1976-ல் அளித்த இந்த தீர்ப்பை முன்மாதிரியாக கொண்டு தான் ஜெயலலிதாவுக்கு 11.5.2015 விடுதலை வழங்கி நீதிபதி குமாரசாமி உத்தரவு பிறப்பித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x