Last Updated : 21 May, 2015 04:26 PM

 

Published : 21 May 2015 04:26 PM
Last Updated : 21 May 2015 04:26 PM

சுற்றுலா தலங்களில் அனுபவ பாடம் கற்கும் ஆதரவற்ற குழந்தைகள்: பள்ளிப்படிப்பை மட்டும் நம்பி பயனில்லையாம்!

சுற்றுலா தலங்களில் வாழ்வியல் அனுபவப் பாடங்களை கற்றுவரும் ஆதரவற்ற குழந்தைகள் கன்னியாகுமரியில் சங்கமித்தனர். `பள்ளிப்படிப்பை மட்டும் நம்பி பயனில்லை. சுற்றுலா சென்று வருவது நடைமுறை பாடங்களை அளிக்கிறது’ என அவர்கள் தெரிவித்தனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிகின் றனர். சமீபத்தில் செகந்திரா பாத்தில் உள்ள `தாரா’ என்னும் ஆதரவற்றோர் இல்லத் தில் இருந்து 130 பள்ளி குழந்தை கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங் களை சுற்றிப்பார்த்ததுடன், சுற்றுலா வந்திருந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தோர், தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் கல்வி, உணவு ஆகியவை குறித்து கேட்டறிந்தனர்.

இக்குழுவில் இடம்பெற்றிருந்த தஞ்சாவூரை சேர்ந்த அருண்குமார் என்ற 9-ம் வகுப்பு மாணவர் கூறும்போது:

குடும்ப வறுமை காரணமாக உறவினர்கள் மூலம் இந்த இல்லத்தில் சேர்ந்து படிக்கிறேன். பலரது உதவியால் கடந்த 5 ஆண்டுகளாக கோடை விடுமுறையில் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறோம். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த அனாதை சிறுவர்கள் இப்பள்ளியில் பயில்கின்றனர். இந்த ஆண்டு 7 நாள் பயணமாக தமிழகம், கேரளா சென்றோம்.

ரயில் இருக்கை யில் அமரும்போதே ஒவ்வொரு மனிதர்களும் காட்டிய விருப்பு வெறுப்பு, குணநலன் களை நாங்கள் கவனித்தோம். சாதாரண பெட்டியில் பயணம் செய்தபோது, `அனாதை குழந்தைகளுக்கு எதற்கு சீட்? கீழே உட்காருங்கள்’ என படித்த இளைஞர்களும், பெண்களும் கூட எங்களை ஊதாசீனப் படுத்தினர்.

அதேவேளை பலர் பரிவுடன் நடந்து கொண்டனர். தங்கள் உணவை எங்களுடன் பகிர்ந்து உண்ட பண்புடை யவர்களையும் பார்த் தோம். இவற்றை எங்கள் செல்பேசியில் வீடியோ எடுத்துள்ளோம்.

பள்ளிப்படிப்போடு வாழ்க்கை முறை நின்றுவிடுவதில்லை. வேறுமாநிலம், நாட்டுக்கு சுற்றுலா சென்று வருவது சிறந்த அனுபவத்தை தருகிறது’ என்றார்.

கேரளம், தமிழக பெற்றோர்

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சின்னு என்ற சிறுவன் கூறும்போது, `நாங்கள் சிறுவயதில் ஏன் பெற்றோர் ஆதரவை இழந்தோம் என்பது இன்னும் நெருடலாக உள்ளது. குழந்தைகளின் படிப்பு, ஆரோக்கியம், உணவு, உடை போன்றவற்றுக்கு ஒவ்வொரு மாநிலத்தினரும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை, சுற்றுலா பயணத்தின் போது கணக்கெடுத்துள்ளோம். இதில் கேரள மாநில பெற்றோர் முதலிடத்தில் உள்ளனர்.

சுயநலமின்றி குழந்தைகளிடம் அக்கறை காட்டுவதில் தமிழகத்தை சேர்ந்தோர் சிறந்தவர்கள்’ என்றார்.

ஆதரவற்ற குழந்தைகளை சுற்றுலா அழைத்து வந்த ஜோஸ் மாத்யூ கூறும்போது, `இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.

ஒருவேளை உணவுக்காக வீதிகளில் அலைந்து துன்புறுத் தப்படுவதை பார்த்திருக்கிறேன். இதனாலேயே ஆதரவற்ற குழந்தைகளுக்கான `தாரா’ மையத்தை செயல்படுத்தி வருகி றேன். கன்னியாகுமரியில் பல மாநில மக்களை சந்தித்து நாட்டு நடப்புகளை இக்குழந்தைகள் அறிந்து கொண்டனர்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x