Published : 31 May 2015 08:38 AM
Last Updated : 31 May 2015 08:38 AM

92-வது பிறந்தநாள் விழா: சென்னை பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்கிறார்

திமுக தலைவர் மு.கருணாநிதி வரும் ஜூன் 3-ம் தேதி 91 வயது முடிந்து 92-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி பொதுக்கூட்டம், கருத்தரங்கம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள் ளனர். ஜூன் 3-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடை பெறும் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் கருணாநிதி, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x