Published : 05 May 2015 10:23 AM
Last Updated : 05 May 2015 10:23 AM
உலகில் 56,441 வனவிலங்குகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஐ.நா. சபையின் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபையின் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பானது (ஐ.யூ.சி.என்.) அழிவின் விளிம்பில் உள்ள வனவிலங்குகள் மற்றும் தாவரங் களைக் கண்டறிந்து உலகுக்கு அறிவிக்கும். அந்த வகையில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற இந்த அமைப்பின் ஆய்வில், உலகில் 56,441 வனவிலங்குகள், 19,738 தாவரங்கள் என 76,179 உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
அழிந்துவரும் விலங்குகள்
இதுகுறித்து திண்டுக்கல் வன உயிரினங்கள் ஆர்வலர் டாக்டர் ராம சுப்பு `தி இந்து’விடம் கூறியதாவது: ‘‘உலகளவில் இந்தியாவில் 4,850 வன விலங்குகள், 2,119 தாவரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. போடிநாயக்கனூர் மலையில் நடமாடும் ராவோ செஸ்டஸ் டிராவன் கோரிக்கஸ் என்ற ஒரு வகை தவளை யினம் முற்றிலும் அழிந்துவிட்டது. மெட்ராஸ் ஸ்பாட்டட் அரணை, நம்தபா பறக்கும் அணில், புதுச்சேரி சுறா, சும்த்ரன் காண்டாமிருகம், காரியல் வகை முதலை, கங்கை சுறா, இந்திய கழுகு, ராமேசுவரம் பாராசூட் சிலந்தி, குள்ளப்பன்றி, இந்தியன் பஸ்டர்டு உள்ளிட்டவை மிகவும் மோசமான நிலையில் அழிந்துவருகின்றன.
கொடி நாகம், இந்திய நீர் எருமை, குரைக்கும் மான், பச்சை ஆமை, ஆசியா யானை, ஆசியா காட்டுநாய், களக்காடு பாறை கெண்டை மீன், இந்திய எறும்புத் திண்ணி, சிறுத்தை, நீலகிரி பைபட், ஆசியா சிங்கம், புலி மற்றும் பனிச்சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அழியும்தருவாயில் உள்ளன.
சர்வதேச சந்தையில் வனவிலங் குகளுக்கு ஏற்பட்டுள்ள சந்தை மதிப்பு, அவற்றில் இருந்து தயாரிக் கப்படும் மருந்து பொருட்களுக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள வர வேற்பு போன்றவை வனவிலங் களின் அழிவுக்கு முக்கிய காரணம். மேலும், காடுகளை அழித்து விளை நிலங்கள், சுற்றுலாத் தலங்கள் அமைப்பது, காட்டுத் தீ, அந்நிய களைச் செடிகள் அதிகரிப்பு, சட்டவிரோதமாக வேட்டையாடுதல் போன்றவற்றால் காடுகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
காடுகளில் மனித நடமாட்டம் அதிகரிப்பதால் வனவிலங்குகளின் இனப்பெருக்கத் திறன் குறைகிறது. 75 சதவீத வனவிலங்குகள் தாவரங் களைச் சார்ந்துள்ளன. ஒரு தாவ ரம் அழிந்தால் அவற்றை சார்ந் திருக்கும் வனவிலங்குகளும் அழிகின்றன.
குறிப்பாக சிங்கவால் குரங்கு `குள்ளிநியா’ என்ற ஒரு வகை மரத்தைச் சார்ந்துள்ளது. தற்போது இந்த மரங்கள் அழிவதால் சிங்க வால் குரங்குகளும் அழிந்து வருகின் றன.
பறவைகள், விலங்குகளை அலங்காரத்துக்காக பிடித்து வைத்து கூண்டுகளில் வைப்பதா லும் அவை அழிகின்றன.
உலகிலேயே சீனாவில் வன விலங்குகளின் உடல் உறுப்புகளில் இருந்து அதிகளவு இயற்கை மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அவர்களுடைய இயற்கை மருத்து வமானது முழுக்க முழுக்க வனவிலங்குகளைச் சார்ந்துள்ளது. புலியின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆண் களின் ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதாக அவர்கள் நம்புகின் றனர். பாம்புகளை பாட்டிலில் அடைத்து அதில் ஒயினை ஊற்றி பாம்பு ஒயின் தயாரிக்கின்றனர்.
இதேபோல், காட்டெருமை, காண்டாமிருகத்தின் கொம்புகள், யானைமுடி, தந்தம், கரடியின் கணைய நீர், தேவாங்கு தோல், நரியின் தலைப்பகுதி எலும்பு போன்றவற்றில் இருந்து சீனாவில் மருந்துகள் தயாரிக்கப்படு கின்றன.
பறவைகள் தங்களுடைய எச்சத் தின் மூலம் கூடுகளை கட்டுகின்றன. அந்த கூடுகளில் அதிக மருத்துவ குணம் கொண்ட பொருள்கள் உள்ளதாகக் கூறி கூடுகளை எடுக் கின்றனர். அதனால் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க முடி யாமல் அதன் சந்ததிகள் அழிகின் றன.
பிலிப்பைன்ஸ், நேபாளம், சீனா, இந்தோனேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வனவிலங்கு கள் அதிகளவில் வேட்டையாடப் படுகின்றன.
அந்நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஓரளவு குறைவு. இந்தியாவில் வேட்டை யாடப்படும் வன விலங்குகள் நேபாளம் வழியாக சீனாவுக்கு கடத்தப்படுகின்றன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT