Published : 28 May 2015 06:48 PM
Last Updated : 28 May 2015 06:48 PM

பன்னாட்டு நிறுவனங்கள் வருவது பெருமைப்படும் விஷயமல்ல: பழ.நெடுமாறன் கருத்து

‘பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருவது பெருமைப்படும் விஷயமல்ல’என்று, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் சைவ சபையும், தமிழ் முழக்க பேரவையும் இணைந்து நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் ‘குறுகிப்போன தமிழகமும் கூனிப்போன தமிழரும்’ என்ற தலைப்பில் அவர் பேசும்போது, ‘அந்நிய முதலீடுகளால் நமது நாட்டின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன.

பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு நமது நீராதாரங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதுபோல் பல்வேறு நிலைகளிலும் தமிழகம் குறுகிப்போயிருக்கிறது’ என்றார் அவர்.

பேராசிரியர் மு.செ. அறிவரசன் எழுதிய ‘தமிழ் அறிவோம்’ என்ற நூலை பழ. நெடுமாறன் வெளியிட்டார். முதல் பிரதியை திருநெல்வேலி பொருநை இலக்கிய வட்ட புரவலர் தளவாய் ராமசாமி பெற்றுக்கொண்டார்.

சைவ சபை தலைவர் மீ. வள்ளிநாயகம் தலைமை வகித்தார். தமிழ் முழக்க பேரவை அமைப்பாளர் சு. செல்லப்பா வரவேற்றார். சைவ சபை செயலாளர் வெ. கிருஷ்ணன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x