Published : 26 May 2015 09:39 PM
Last Updated : 26 May 2015 09:39 PM

பெண்ணை மிரட்டிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புகார் கூறிய பெண்ணை மிரட்டிய ராமேஸ்வரம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த அஞ்சுகம் என்ற தலித் பெண்ணை, ராமேஸ்வரம் அக்காள் மடத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரம் என்பவரது மகன் சேதுபாஸ்கர் ஆசைவார்த்தை காட்டி கர்ப்பமடையச் செய்துள்ளார். இது குறித்து காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

பின்னர் அஞ்சுகத்தை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு சேதுபாஸ்கர் வெளியூர் சென்றுவிட்டார். உறவினர்கள் அஞ்சுகத்தை சித்ரவதை செய்துள்ளனர். இது குறித்து அஞ்சுகம் மகளிர் காவல் நிலையத்தில் செய்துள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் ஆய்வாளர் அஞ்சுகத்தை மிரட்டியுள்ளார். அதோடு கணவரை பிரிந்து விடுமாறு நிர்பந்தம் செய்துள்ளார்.

இதனை கண்டித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வடகொரியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஆர். செந்தில்வேல் ஆகியேர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. செந்தில்வேலை கைத செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

எனவே, புகார் தெரிவித்த பெண்ணை மிரட்டிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட் செந்தில்வேலை உடனடியாக விடுதலை செய்வதோடு, பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x