Published : 06 May 2015 08:26 PM
Last Updated : 06 May 2015 08:26 PM

கடும் கோடையிலும் தமிழகத்தில் பீர் விற்பனை சரிவு

2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு கோடை மாதங்களில் பீர் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது.

டாஸ்மாக்கில் பீர் விற்பனைகள் கடுமையாக சரிவடைந்துள்ளது. 12 பாட்டில்கள் கொண்ட கேஸ்கள் ஜனவரி மாதம் 14 லட்சம் வரைதான் விற்றுள்ளது. மாறாக 2014-ம் ஆண்டு இதே மாதத்தில் 15.80 லட்சம் கேஸ்கள் விற்றுள்ளன.

கடும் வெயில் பிய்த்து உதறும் மார்ச் மாதம் முதலான கோடை காலத்தில் கூட பீர்களுக்கான தேவை மிகவும் குறைவாக உள்ளதாகவே டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.

2015, மார்ச் மாதத்தில் 20.85 லட்சம் கேஸ்களே விற்றுள்ளன, ஆனால் 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 25.30 லட்சம் கேஸ்கள் விற்றுள்ளன.

ஏப்ரல் மாதத்திலும் 21.71 கேஸ்கள் விற்றுள்ளன. ஆனால் 2014 ஏப்ரலில் 27.60 லட்சம் கேஸ்கள் விற்கப்பட்டுள்ளன.

2014-ம் ஆண்டில் இருமுறை விலைகள் அதிகரிக்கப்பட்டதால் பீர் விற்பனை குறைந்துள்ளதாக, பெயர் கூற விரும்பாத டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மொத்த விற்பனை மதிப்பு பற்றி கேட்ட போது, "விற்பனை மதிப்பு பற்றிய விவரங்களை அறிய எங்களுக்கு அனுமதி இல்லை" என்றார் டாஸ்மாக் யூனியன் உறுப்பினர் ஒருவர்.

சென்னையில், கோடம்பாக்கத்தில் உள்ள பார்சன் வளாகத்தில் பீர் விற்பனைக்கென்றே தனியாக ஒரு விற்பனை மையத்தை டாஸ்மாக் ஏற்படுத்தியது, ஆனாலும் அதனால் பயனில்லை.

விற்பனை குறைவுக்கு இரண்டு காரணங்களே முக்கியமாகக் கூறப்படுகின்றன. ஒன்று விலை அதிகரிப்பு, இன்னொன்று சாதாரண டாஸ்மாக் கடைகளில் பீர் கூலாக இருப்பதில்லை என்பதே. இன்னொரு காரணமும் கூறப்படுகிறது, மக்கள் விரும்பும் பிராண்ட்கள் கிடைப்பதில்லை என்பதாகும்.

தமிழக அரசு வருமானத்தில் பெரும் பங்கு வகிக்கும் டாஸ்மாக் விற்பனை, இந்த ஆண்டு இத்தகைய காரணங்களினால் சுணக்கம் கண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x