Published : 05 May 2015 07:41 AM
Last Updated : 05 May 2015 07:41 AM
தாம்பரத்திலிருந்து, வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம் பகுதிக்கு குளிர்சாதன பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து வாலா ஜாபாத், ஒரகடம் வழியாக தாம் பரம் மற்றும் சென்னைக்கு செல் லும் பயணிகளின் வசதிக்காக, விழுப்புரம் போக்குவரத்து மண் டலத்தின் சார்பில், ஓரிக்கை அரசு போக்குவரத்து கழக பணிமனை தடம் எண் 79 என்ற பேருந்தையும், வேலூர் பணிமனை தடம் எண் 155 என்ற பேருந்தையும் இயக்கி வருகின்றன.
இந்த வழித்தடத்தில் இயக்கப் படும் பேருந்துகள், காஞ்சிபுரம் வாசிகளின் முக்கிய பேருந்து சேவையாக இருப்பதால், சாதாரண நாட்களிலும் பேருந்துகள் கூட்ட நெரிசலுடன் காணப்படும். காஞ்சிபு ரம் போக்குவரத்து பணிமனை, இவ்வழித்தடத்தில் ஏராளமான பேருந்துகளை இயக்கினாலும், விடுமுறை மற்றும் விசேஷ நாட் களில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு ஏராளமான பயணிகள் செல்வதால் பேருந்து களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கூட்டநெரிசலால் பணிக்கு செல்வோர் நாள்தோறும் பெரும் சிரமத்துடன் பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை உள் ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயமும் பெண் பயணிகளுக்கு ஏற்படுகிறது. இதனால், மேற்கூறிய வழித்தடத்தில் குளிர்சாதன பேருந்துகளையும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பயணிகள் கூறிய தாவது: காஞ்சிபுரம் வாலாஜா பாத் - ஒரகடம் - தாம்பரம் வழித் தடத்தில் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வேலைக்கு செல்வோரே இந்த பேருந்து சேவையை அதிகமாக பயன்படுத்து கின்றனர். எனினும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலால் சரியான நேரத்துக்கு அலுவலகம் செல்ல முடிவதில்லை. அதனால், கூட்டநெரிசலை தவிர்த்தல் மற் றும் பயணிகளின் நலன் கருதி காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக தாம்பரத்துக்கு குளிர்சாதன பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகம் இயக்க வேண்டும்.
பணிக்கு செல்லும் ஊழியர் களே குளிர்சாதன பேருந்தை அதிகம் பயன்படுத்துவதால் அவர் களுக்கு இந்த சேவை பயனுள்ள தாக அமையும். இதனால், காஞ்சி புரம் போக்குவரத்து பணிமனை பேருந்துகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படாது.
ஏனெனில், இந்த வழித்தடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்துகளில் பயணிக்கின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஓரிக்கை, காஞ்சி புரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர்கள் கூறிய தாவது: காஞ்சிபுரம் பயணிகளின் வசதிக்காக ஓரிக்கை, உத்திரமேரூர், தாம்பரம் ஆகிய பணிமனைகளில் இருந்து 27 பேருந்துகள், வேலூர் பணிமனையிலிருந்து 15 பேருந்துகள் என மொத்தம் 42 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் பணிமனை பேருந்துகளில் அதிக வருவாய் ஈட்டி தரும் சேவையாக தடம் எண் 79 வழித்தடம் விளங்கி வருகிறது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்கினால், காஞ்சிபுரம் பணிமனையின் வரு வாய் பெரிதும் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தார்.
இதுகுறித்து, மாநகர போக்கு வரத்து கழக திட்ட விரிவாக்க பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தாம்பரத்திலிருந்து வாலாஜாபாத் வழியாக, காஞ்சிபுரத்துக்கு குளிர் சாதன பேருந்துகள் இயக்குவது தொடர்பாக இதுவரை திட்டங்கள் இல்லை.
எனினும், தற்போது பயணிகளின் எதிர்பார்ப்பை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT