Published : 26 May 2015 07:23 AM
Last Updated : 26 May 2015 07:23 AM

இந்திய கல்வி மேம்பாட்டு சங்க தலைவராக விஐடி வேந்தர் தேர்வு

இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத்தின் தலைவராக விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசு வநாதன் மீண்டும் தேர்வு செய்யப் பட்டார்.

டெல்லியில் இந்திய கல்வி மேம்பாட்டு சங்கத்தின் 6-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

மாற்றுத் தலைவராக பிர்லா தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்லூரி இயக்குநர் சதுர்வேதி, பொருளாளராக மாணவ் ரச்சனா பல்கலைக்கழக தலைவர் பிரசாந்த் பல்லா, அலுவலக செயலாளராக பழனிவேல் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த சங்கம் கல்வி நிறுவனங் களுக்கும் அரசுக்கும் இடையில் பாலமாக இருந்து வருகிறது. மேலும், தேசிய அளவில் தரமான கல்விக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x