Published : 23 May 2015 07:57 AM
Last Updated : 23 May 2015 07:57 AM
திமுக முன்னாள் அமைச்சர் நேரு வின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், ராமஜெயத்தின் மனைவி லதா, தனது கணவரின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீஸார், தங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டி ருந்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி குழுவினர் மாற்றப் பட்டுள்ளதாக நேற்று தகவல் பரவியது. இதுகுறித்து வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி டிஎஸ்பி மலைச்சாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இந்த வழக்கு எங்களுக்கு சவாலான ஒன்று. 12 இன்ஸ் பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீஸார் ஆரம்பத்தில் காட்டிய அதே தீவிரத்துடன், தற்போதும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன் தனிப்படையிலிருந்த புதுக் கோட்டை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் வீரமணி பதவி உயர்வு பெற்றதால், அவரது பணியிடத்துக்கு இன்ஸ் பெக்டர் ஜெனோவா வந்துள்ளார். அதேபோல, அரியலூர் இன்ஸ் பெக்டர் மகாதேவன் பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டதால், இன்ஸ்பெக்டர் மணிவேல் அவரது இடத்துக்கு வந்துள்ளார். ஏற்கெ னவே உள்ள 12 தனிப்படைகள் தொடர்ந்து நீடிக்கின்றன.
பதவி உயர்வு பெற்றுச் சென்ற 2 இன்ஸ்பெக்டர்களுக்குப் பதிலாக வந்துள்ள இரு இன்ஸ்பெக்டர்களும் தனிப்படையில் இணைந்து, துப்புதுலக்கி வருகின்றனர். மற்றபடி விசாரணைக் குழு மாற்றியமைக்கப்படவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT