Last Updated : 09 May, 2015 10:58 AM

 

Published : 09 May 2015 10:58 AM
Last Updated : 09 May 2015 10:58 AM

கிருஷ்ணகிரியில் கம்ப்யூட்டர் மூலம் கள்ள நோட்டுகள் தயாரித்த 2 பேர் கைது

கிருஷ்ணகிரியில் கம்ப்யூட்டர் மூலம் கள்ள நோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருபவர் மல்லேஷ்(45). இவர் நேற்று இரவு கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, கடைக்கு வந்த வாலிபர்கள் இருவர், 100 ரூபாய் நோட்டுகளை வழங்கி பொருட்கள் வழங்குமாறு கூறினார்.

அவர்கள் கொடுத்த ரூபாய் நோட்டுகளில் சந்தேகம் அடைந்த, மல்லேஷ் தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில் தகவல் அளித்தார். போலீஸார் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்த ஜடாக்கை சேர்ந்த ஈரப்பா மகன் ஸ்ரீதர்(19), பாலதொட்டனப்பள்ளியைச் சேர்ந்த சொக்கப்பன் மகன் ரவி(27) என்பதும், இவர்கள் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

மேலும் இவர்கள் ஓசூர் அருகே மத்திகிரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கம்ப்யூட்டர் மற்றும் கலர் பிரிண்டர் மூலம் கள்ள நோட்டுகளை தயாரித்து, சில மாதங்களாக ஓசூர், தேன்கனிக்கோட்டை தளி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் புழுக்கத்தில் விட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர், ரவி ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரத்து 290 மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள், கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x