Published : 28 May 2015 08:24 AM
Last Updated : 28 May 2015 08:24 AM

ஓ.பன்னீர்செல்வம் தம்பி மீது நடவடிக்கை: ஆளுங்கட்சி வட்டாரத்தில் பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வம் தம்பி மீது எந்நேரமும் நடவடிக்கை பாயும் என்று ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா பெரியகுளம் நகராட்சி தலைவராக உள்ளார். சம்பந்தி செல்ல பாண்டியன் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பணியாற்றி வருகிறார். மருமகன் காசிராஜன் வீட்டுவசதி வாரிய வழக்கறிஞராக உள்ளார். இவர்கள் மூவரையும் ராஜினாமா செய்ய ஆளுங்கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக, தகவல்கள் பரவி வருகின்றன.

பெரியகுளம் கோயில் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி நாகமுத்துவின் தந்தை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, மணல் கடத்தல், அதிகாரிகளை மிரட்டியது என்ற குற்றச்சாட்டுகளும் ராஜா மீது சுமத்தப்படுகிறது.

இதுகுறித்து ஆளுங்கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு:

ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியில் இருந்தபோது, பல்வேறு துறை களில் நடந்த அத்துமீறல்கள் குறித்து ரகசிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்குழுவினர் நடத்திய விசார ணையில், பொதுப் பணித்துறை மற்றும் சுகாதாரத் துறையில் அதிக அளவில் அத்துமீறல்கள் நடந்ததாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இதில், ராஜாவின் தலையீடு அதிகம் இருந்ததாகவும், தேனி மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதிச் சான்று வழங்கி யிருப்பதாகவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. அதிகாரிகள் மாற்றல் விஷயத்திலும் தலை யீடுகள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ராஜாவை சென்னைக்கு அழைத்து ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லபாண்டியன் நேற்று நீதிமன் றத்தில் ஆஜராகி உள்ளார்.

ராஜி னாமா செய்யும்படி தன்னை யாரும் அறிவுறுத்தவில்லை என்று அவர் மறுத்துள்ளார். ஆனால் காசிராஜன் ராஜினாமா செய்துள் ளார். ராஜா தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையால் ஆளுங் கட்சி வட்டாரமே பரபரப்பாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x