Published : 16 May 2015 10:02 AM
Last Updated : 16 May 2015 10:02 AM
தமிழகத்தில் அணைகள், குளங்கள், ஏரிகளில் கடைமடை நிலம் வரை தண்ணீர் செல்வதற்கான முறையான பாசன கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் 12 சதவீதம் விவசாயிகள் மாற்றுத் தொழில்களுக்கு செல்வ தாக அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 111 அணைகள் உள்ளன. 8,113 பெரிய குளங்கள், 21400 சிறிய நடுத்தர குளங்கள், 11 பெரிய ஏரிகள், 106 சிறிய, நடுத்தர ஏரிகள் உள்ளன. தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1.30 கோடி ஹெக்டேர். இதில் 48 லட்சம் ஹெக்டேர் மட்டுமே பாசன வசதிகள் பெற்ற விவசாய நிலப்பரப்புகள் ஆகும்.
தண்ணீர் செல்வதில்லை
ஒவ்வொரு ஆண்டும் போது மான மழை பெய்து அணைகள், குளங்கள், ஏரிகளில் போதுமான நீர் ஆதாரம் இருந்தும், கடைசி கடைமடை நிலம் வரை பாசன கட்டமைப்பு வசதிகள் முறைப்படுத் தப்படாததால் தற்போது பாசன நிலங்களுக்கு சரியான காலகட் டத்தில் தண்ணீர் செல்வதில்லை. பாசனப் பரப்பில் வெறும் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே நீர் ஆதாரம் பெறுகிறது. மீதமுள்ள பாசன நிலப்பரப்பு அணைகளில் நீர் இருந்தும் கால்வாய்கள் சீர மைக்கப்படாமலும், முறையான கால்வாய்கள் இல்லாததன் விளைவாக பாசன வசதிகள் கிடைக்காமல் உள்ளன.
இதனால், ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 12 சதவீதம் விவசாயிகள் சத்தமில்லாமல் மாற்றுத் தொழில்களுக்கு செல்வ தாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘‘திண்டுக்கல் மாவட்ட விவசாய சாகுபடி பரப்பு 2.47 லட்சம் ஹெக் டேர். இங்கு குதிரையாறு, பாலாறு, பொருந்தலாறு, வரதமாநதி, காமராஜர் நீர்தேக்கம், மருதாநதி, நங்காஞ்சியாறு மற்றும் அழகாபுரி ஆகிய பிரதான அணைகள் உள் ளன. இவை தவிர 13 சிறிய நீர்த்தேக்கங்கள், 3104 குளங்கள், 99,374 கிணறுகள், நீர் உள்ள 3.21 லட்சம் ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இவ்வளவு நீர் ஆதாரம் இருந்தும், 1.04 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெறுகின்றன. மீத முள்ள 1.43 லட்சம் ஹெக்டேர் மானாவாரியாகவும், தரிசு நிலமாக வும் உள்ளன. 10 ஆண்டுகள் கணக்கெடுப்பின்படி, இந்த மாவட்ட தரைப்பகுதிகளில் சராசரியாக 700 மி.மீ. மழையும், கொடைக்கானல் மலைப்பகுதியில் 1.450 மி.மீ. மழை யும் பெய்துள்ளது.
அணைகள், குளங்கள், ஏரிகள் மூலம் சமச்சீரான பாசன வசதிகள் இல்லாததால் நிலையில்லா விளைச்சல், விலை கிடைக்காமல் மாவட்டத்தில் ஆண்டுக்கு 8 சதவீதம் விவசாயிகள் வேறு தொழில்களுக்கு செல்கின்றனர். 6 சதவீதம் முதல் 10 சதவீதம் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக வும், பிற தொழில்களுக்கும் விற் கப்படுகின்றன. 47 முதல் 60 கிராம பஞ்சாயத்துகளில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.
புளோரைடு உப்பு குறைபாடு நிலத்தடி நீரில் அதிகளவு உள்ள தால், இந்த மாவட்டத்தில் தொழிற் சாலைகள் வரவில்லை. அதனால், தற்போது வறட்சி மாவட்டங்களில் ராமநாதபுரத்தை திண்டுக்கல் முந்துகிறது. கிருஷ்ணகிரி, தரும புரி, திருப்பூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட் டங்களில் வறட்சி நீடிப்பதற்கு இதுவே காரணம்’’ என்றார் அவர்.
என்ன தீர்வு?
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நீர் வடிப்பகுதி மேம் பாட்டு முகமை வேளாண்மை பொறியாளர் பிரிட்டோ ராஜிடம் கேட்டபோது அவர் கூறியது: ‘‘தமிழகத்தில் போதுமான மழை பெய்துள்ளது. இந்த மழையே நம் முடைய தேவைகள் அனைத்துக் கும் போதுமானது. நீர் மேலாண்மை இல்லாததுதான் தற்போது விவ சாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறுவதற்கு முக்கிய காரணம். அணைகள், சிறிய நீர்த்தேக்கங் கள், ஆறுகளில் தண்ணீரை விவ சாயத்துக்கு பயன்படுத்தும் கட்ட மைப்பு வசதிகள் அமைக்கப்பட வில்லை.
குறிப்பாக திண்டுக்கல் மாவட் டத்தில் சண்முகா நதி, நல்லதங்காள் ஓடை ஆறுகள் இந்த மாவட்டத்தில் பாய்ந்தோடியும், எந்த பயனும் இல்லாமல் அமராவதி ஆற்றில் கலந்து திருப்பூர் மாவட்டத்துக்கு சென்றுவிடுகிறது. வைகை அணை நீர் 22 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே திண்டுக்கல் மாவட்டத்தில் செல்கிறது. இதுவும் சிமெண்ட் வாய்க்காலில் செல்வதால் மாவட் டத்துக்கு எந்த பயனும் இல்லை.
இந்த ஆறுகளின் குறுக்கே உயரமான தடுப்பணைகள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் மாவட்டத்தின் வறட்சிப் பகுதிகள் பயன் பெறும். கசிவு நீர் குட்டை, வாய்க்கால், நில மேம்பாடு, பண்ணைக்குட்டை போன்றவற்றை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT