Published : 14 May 2015 07:39 AM
Last Updated : 14 May 2015 07:39 AM
பாலூரில் செயல்படும் ரயில் நீர் தொழிற்கூடத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் நீர் விற்பனைக்காக உறிஞ்சப் படுவதால், அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால், மாவட்டத்தின் குடிநீர் தேவையை கருதி ரயில் நீர் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என விவசாயி கள் உட்பட அனைத்து தரப்பி னரும் அரசை வலியுறுத்த தொடங்கி யுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமான பாலாறு வறண்டு போனதால், மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாலூரில் ரூ.13.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட "ரயில் நீர் தொழிற்கூடம்” கடந்த 2011-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. நாள் ஒன்றுக்கு 1.20 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்தி கரிப்பு செய்து விற்பனைக்கு அனுப்புவதாக, ரயில் நீர் நிர்வாகம் அப்போது தெரிவித்திருந்தது.
இதனால், பாலூர் மற்றும் அதை சுற்றியுள்ள 30-க்கும் மேற் பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கடுமை யான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. இதையடுத்து, இந்த தொழிற் கூடத்தை மூட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பாலூர் ஊராட்சி தலைவர் சாந்தகுமார் கூறிய தாவது: பாலூர் பகுதியில் செயல் பட்டு வரும் ரயில் நீர் தொழிற் கூடம், ரயில்வே துறைக்கு சொந்த மான நிலத்தில் உள்ளபோதி லும், ஊராட்சி பகுதியில் அமைந் துள்ளதால், ஆழ்துளை கிணறு அமைத்து விற்பனைக்காக நிலத்தடி நீரை உறிஞ்ச ஊராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளனர்.
ஆனால், தொழிற்கூடத்தில், நாள் ஒன்றுக்கு எத்தனை லட்சம் லிட்டர் குடிநீர் விற்பனைக்கு தயாரிக்கப்படுகிறது போன்ற விவரங்களை, ஊராட்சி நிர்வாகத் துக்கு அவர்கள் வழங்கவில்லை. எந்தவிதமான வரியினங்களையும் செலுத்தவில்லை. அரசு கட்டிடம் மற்றும் அரசு சார்ந்த தொழிற்கூடம் என்பதால் வரி செலுத்த முடியாது என ரயில் நீர் நிர்வாகம் தெரி விக்கிறது.
இது தொடர்பாக, மாவட்ட நிர் வாகத்துக்கு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. பாலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டதால், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத னால், ரயில் நீர் தொழிற்கூடத்தில் உற்பத்தியை நிறுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக, ஊராட்சியில் தீர்மானம் நிறை வேற்றி தர கிராம மக்கள் தயா ராக உள்ளனர் என்று அவர் தெரி வித்தார்.
இதுகுறித்து, பாலாறு பாது காப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் காஞ்சி அமுதன் கூறிய தாவது: ரயில் நீர் என்ற பெயரில் பாலூரில் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகிறார்கள். 300 கி.மீ. தொலை வுக்கு மட்டுமே விற்பனை என்ற ஒப்பந்தத்தை மீறி, பாலாற்று தண்ணீரை 2 ஆயிரம் கி.மீ. தொலை வுக்கும் மேல் கொண்டு சென்று விற் பனை செய்யும் நிலை உள்ளது.
ஏற்கெனவே மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்த நிலை யில், பாலாற்று படுகையின் நீர் ஆதாரத்திலிருந்து தண்ணீர் எடுத்து தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்கின்றனர். இத னால், ஒருசில ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட திட்ட மேலாளர் முத்துமீனாள் கூறியதாவது: இந்த பிரச்சினை குறித்து காட்டாங் கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பாலூர் ஊராட்சி தலைவரிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சி யரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறிய தாவது: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், இதை கவ னத்தில் கொள்ள வேண்டியது அவ சியம். எனினும், அனைத்து தரப் பினரிடமும் முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT