Published : 31 May 2014 10:19 AM
Last Updated : 31 May 2014 10:19 AM

காங்கிரஸை அழிக்கப் பார்க்கிறார் ப.சிதம்பரம்: மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியையே அழிக்கப் பார்க்கிறார் என்று கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கோவை தங்கம், சாருபாலா தொண்டைமான், சிரஞ்சீவி, ஏ.கே.தாஸ், பாலசுப்பிர மணியம், தணிகாசலம், வேணு கோபால் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள், ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள் கூட்டாக வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து ஞான தேசிகனை நீக்க வேண்டும் என்று கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சியைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு சிலர் அறிக்கை வெளியிட்டுள்ளது மிகப் பெரிய தவறு. அறிக்கை விட்டவர்கள், ஜூன் 6-ம் தேதி நடக்கவுள்ள மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தோல்விக்கான காரணங்களையும், தங்களுடைய கருத்துக்களையும் கட்சித் தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கலாம். அதை விடுத்து தன்னிச்சையாக அறிக்கை விடுவது ஏற்புடையது அல்ல.

இன்று கோரிக்கை விடுப்ப வர்கள், தேர்தலின்போது எந்தத் தொகுதிக்கும் சென்று பணியாற்ற வில்லை. இலங்கை பிரச்சினை, ராஜீவ் கொலையாளிகள் விடுதலை போன்ற பிரச்சினைகளின்போது தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலை களில் இவர்களோ அல்லது இவர்களுக்கு பின்னால் இருந்து இயக்குபவர்களோ யாரும் குரல் கொடுக்கவில்லை.

ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோதுதான் அகில இந்திய அளவில் பொருளாதார வீழ்ச்சியும், விலைவாசி உயர்வும் ஏற்பட்டு இன்று காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது. அவசரப்பட்டு ஆந்திராவை இரண்டாகப் பிரித்து அங்கு காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலையை உண்டாக்கியவர் உள் துறை அமைச்சராக இருந்த சிதம்பரம்தான். கட்சிக்காக அல்லாமல் சுயநலத்துக்காக சிவகங்கை தொகுதியில் மட்டும் தன் மகனுக்காகப் பிரச்சாரம் செய்தவர் இன்று கட்சியையே அழிக்கப் பார்க்கிறார்.

கடந்த இரண்டரை ஆண்டு காலமாக கட்சியிலுள்ள எல்லா அமைச்சர்களையும் முன்னாள் மாநிலத் தலைவர்களையும் ஒருங் கிணைத்து கட்சியின் ஒற்று மையை வெளிப்படுத்தி தமிழகம் முழுவதும் கூட்டங்கள் போட்டவர் ஞானதேசிகன். காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளையும், மாவட்ட தலைவர்களையும் நியமித்து கட்சிக்கு புத்துயிர் ஊட்டி, தொண்டர் களை அரவணைத்துச் செல்லும் தலைவராக ஞானதேசிகன் விளங்குகிறார்.

எனவே, இதுபோன்ற அறிக்கை களை விடுவதன்மூலம் தமிழக காங்கிரஸ் கட்சியை பலவீனப் படுத்தாமல் கட்சியின் வளர்ச்சிக் காக அனைவரும் பாடுபட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x