Published : 09 May 2014 08:20 AM
Last Updated : 09 May 2014 08:20 AM
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவு அதிகார பூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த வினாடியில் இருந்து
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge3.tn.nic.in
ஆகிய இணையதளங்களில் மாண வர்கள் மதிப்பெண்களுடன் தங்கள் தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம். இந்த இணைய தளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டால் தேர்வு முடிவுகளைப் பார்க்க முடியும்.
மேற்குறிப்பிட்ட இணையதள முகவரிகளில் www.dge1.tn.nic.in என்ற இணையதளத்தில் ஸ்மார்ட் போன் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை எளிதாக அறியலாம்.
மேலும், தேர்வு முடிவை செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தெரிந்துகொள்ள முடியும். இந்த வசதியைப் பெறுவதற்கு செல்போன் தகவல் பக்கத்தில் TNBOARD என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, இடைவெளிவிட்டு பிறகு பதிவு எண்ணையும் அதைத்தொடர்ந்து பிறந்த தேதியையும் பதிவுசெய்து 92822-32585 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். அடுத்த சில வினாடிகளில் மதிப்பெண் விவரங்களுடன் தேர்வு முடிவு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
நூலகங்களில் சிறப்பு ஏற்பாடு
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையம் (நிக் சென்டர்) மற்றும் அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் இலவசமாக அறிய ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. அதோடு மாண வர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண் களுடன் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மறுகூட்டல்
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வெழுதிய எந்த ஒரு பாடத்துக்கும் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப் பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி மூலமா கவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையம் மூலமாக வும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 14-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம்.
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் மாண வர்கள் அதே பாடத்துக்கு மதிப் பெண் மறுகூட்டலுக்கு விண்ணப் பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் கிடைக்கப்பெற்ற பின்னர் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT