Published : 15 Apr 2015 11:45 AM
Last Updated : 15 Apr 2015 11:45 AM
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் புறம்போக்கு, மந்தைப் புறம்போக்கு நிலங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பயணத்தைத் தொடங்கி இருக்கிறது மணிமுத் தாறு அகத்திய மலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம்.
களக்காடு முண்டந்துறை புலி கள் சரணாலயத்தில் மரங்கள் மீது வசிக்கும் விலங்குகள், பறவைகள் குறித்து மரங்களின் உச்சிக்கே சென்று நடத்தும் மரவிதானம் ஆராய்ச்சியை (Canopy Research) 13 ஆண்டுகளாக நடத்தி வரு கிறது இந்த மையம். களக்காடு சரணாலயத்துக்குள் புலிகள் நட மாட்டத்தை 2007-ல் முதல்முறை யாக புகைப்படம் எடுத்துக் கொடுத்த இவர்கள், 133 ஆண்டுகளுக்கு முன்பே உலக அளவில் அரிதாக அறிவிக்கப்பட்ட புதர் தவளை கள் களக்காட்டில் இருப்பதை யும் ஆதாரத்துடன் உறுதிப்படுத் தினார்கள்.
ஆண்டுக்கு ஒருமுறை வனத் துறைக்கும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கும் இம்மையம் வழங்கி வரும் ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்த கொள்கை முடிவுகளை அரசு அவ்வப்போது அமல்படுத்தியும் வருகிறது.
மையத்தின் செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசினார் அதன் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன். “நாங்கள் இங்கு வந்த புதிதில் விறகுக்காகவும் கால்நடைகளை மேய்க்கவும் நிறையப் பேர் காடு களுக்குள் சென்று வந்து கொண்டி ருந்தார்கள். வன பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு புரியவைத்து அவர்களின் தேவைக்காக நாங்களே மரக் கன்று களை வழங்கினோம். இரண்டு ஆண்டுகளில் முதிர்வடையும் அந்த மரங்களை அவர்கள் விறகுக்காகவும், கால்நடைகளின் தீனிக்காகவும் வெட்டிப் பயன் படுத்தலாம். இப்படி இதுவரை ஒன்றரை லட்சம் மரக் கன்றுகளை வழங்கி, அவற்றில் முப்பதாயிரம் மரங்களை அவர்கள் வெட்டி பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இப்போது, மேய்ச்சல் மற்றும் மந்தை புறம்போக்கு நிலங்களைத் தேடி எங்களது அடுத்த பயணத்தை தொடங்கி இருக்கிறோம். ஆடு வளர்க்கும் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்கள் இங்குள்ள 100 கிராமங்களில் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் ஆறு மாதம்தான் சொந்த ஊரில் இருப்பார்கள். எஞ்சிய ஆறு மாதங்கள் மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டிக் கொண்டு வெளியூர்களுக்கு நகர்ந்து விடுவார்கள்.
கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காகவும் அவற்றை அடைப்பதற்காகவும் ஒவ்வொரு கிராமத்திலும் மேய்ச்சல் மற்றும் மந்தைப் புறம்போக்கு நிலங்கள் உண்டு. ஆனால், இப்போது அவை பல்வேறு வகைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடக்கின்றன. அந்த நிலங்களைப் பற்றிய விவரம் சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கே தெரியவில்லை.
ஆடுகள் மேயும்போது அவற்றின் மேல் உள்ள உண்ணிகளை கரிச்சான் குருவி, உண்ணி கொக்கு உள்ளிட்டவைகள் கொத்தித் தின்னும். இப்போது மேய்ச்சல் நிலம் இல்லாததால் அந்தப் பறவைகளை பார்ப்பதும் அரிதாகி வருகிறது. எனவே, இப்போது இந்த நூறு கிராமங்களிலும் உள்ள மேய்ச்சல் மற்றும் மந்தை புறம்போக்கு நிலங்களை அடையாளம் காணும் பணியை தொடங்கி இருக்கிறோம். அடையாளம் கண்ட பிறகு எந்த நிலையில் இருந்தாலும் அவற்றை மீட்க அரசுக்கு அறிக்கை அளிப்போம்” என்று மதிவாணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT