Published : 08 Apr 2015 09:05 AM
Last Updated : 08 Apr 2015 09:05 AM

தமிழகத்தில் 119 ஓட்டுநர் பணிக்கு லஞ்சம்: தலா ரூ.1.75 லட்சம் வசூலிக்க அமைச்சர் நிர்பந்தம் - அரசு தலைமை பொறியாளர் திடுக்கிடும் வாக்குமூலம்

தமிழகத்தில் வேளாண்மைத் துறையில் காலியாக இருந்த 119 ஓட்டுநர் பணிக்கும் தலா ரூ.1.75 லட்சம் வசூலிக்குமாறு அமைச்சர் நிர்பந்தித்ததாக, அரசு தலைமை பொறியாளர் வாக்கு மூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற் கொலை வழக்கில் கைது செய் யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமை பொறியாளர் எம்.செந்தில், முத்துக் குமாரசாமியின் மைத்துனர் ஆகி யோரின் வாக்குமூலங்களை சிபிசி ஐடி போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

போலீஸாரிடம் அக்ரி கிருஷ்ண மூர்த்தி அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:

வேளாண்மைத் துறையின் பல்வேறு பிரிவுகளில் ஓட்டுநர்கள் ரூ. 9 ஆயிரம் ஊதியத்தில் நியமிக்கப் பட்டனர். அவர்களுக்கு ரூ. 13 ஆயிரமாக ஊதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான ஒப்புதல் முதல்வரிடமிருந்து வருமென்று காத்திருந்தேன். எனது துறையில் பணி நியமனத்தின்போது யாரி டமும் பணம் பெறவில்லை. முத்துக் குமாரசாமியிடம் நான் பேசியதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிர்பந்தம்

சென்னை வேளாண்மை பொறி யியல்துறை தலைமை பொறி யாளர் எம்.செந்தில் அளித்துள்ள வாக்குமூலம்: கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் வேளாண் பொறியியல் துறை யில் 119 ஓட்டுநர் காலி பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் கோரப்பட்டது. ஆனால் அப்போது வேளாண் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி 119 காலி பணி இடங்களுக்கும், ஒரு இடத்துக்கு தலா ரூ. 1.75 லட்சம் வாங்குமாறு எனக்கு உத்தரவிட்டார்.

அமைச்சர் சொன்னதால் அதை மீற முடியவில்லை. அனைத்து மாவட்ட வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு இத்தக வலை தெரிவித்தேன். முத்துக் குமாரசாமியிடமும் தொலைபேசி மூலம் இதை தெரிவித்திருந்தேன்.ஆனால் திருநெல்வேலியில் காலியாக இருந்த 7 ஒட்டுநர் பணி இடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 7 பேர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர் என்றும், அந்த தேர் வுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும் ஒப்புதல் கொடுத்து விட்டார் என்றும் முத்துக்குமாரசாமி கூறினார்.

அமைச்சரின் கோபத்துக்கு..

தேர்வுப் பட்டியலை பேக்ஸ் மூலம் எனக்கு அனுப்பி வைத்தி ருந்தார். இதையடுத்து முத்துக் குமாரசாமியை தொடர்புகொண்ட நான், அமைச்சர் பணம் கேட்டிருக் கிறார். நீங்கள் செய்துள்ளதை கேள்விப்பட்டால் அவரது கோபத்துக்கு நீங்கள் ஆளாக வேண்டியிருக்கும். பேசாமல் பணம் வசூல் செய்து கொடுத்து விடுங்கள் என்று எச்சரித்தேன்.

சென்னையில் வேளாண் துறை பொறியாளர்கள் கூட்டத்துக்கு வரும்போது பணத்தை கொண்டு வருமாறும் தெரிவித்தேன். ஆனால் அவர் பணம் எதுவும் கொண்டுவரவில்லை.

இதுகுறித்து அக்ரி கிருஷ்ண மூர்த்தி கவனத்துக்கு கொண்டு சென்றோம். அதற்கு அவர், பணி நியமனம் உத்தரவு பெற்றுள்ள 7 பேரிடமும் தலா ரூ.1.75 லட்சம் வசூல் செய்து தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். இந்த தகவலை முத்துக்குமாரசாமியிடம் கூறினேன். ஆனால் அதன் பிறகும் அவர் பணம் வசூல் செய்து தர வில்லை.

இதற்கிடையே அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்ட தால் நானே முத்துக்குமாரசாமி யிடம் 3 தடவை செல்பேசியில் பேசினேன். எந்த வகையிலாவது பணத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கூறினேன்.

பிப்ரவரி 20-ம் தேதி ரயில் முன் பாய்ந்து முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாக வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளர் வெள்ளையா எனக்கு தொலைபேசியில் தெரி வித்தார்.

வாரிசு வேலைக்கு முயற்சி

முத்துக்குமாரசாமியின் வாரிசுகளில் யாராவது ஒருவருக்கு எங்கள் துறையில் அரசு வேலை வாங்கிக் கொடுக்கலாம் என்று மனு எழுதி வாங்கி வருமாறு கூறினேன். அதில் குடும்பம் வறுமையில் இருப்பதால் வேலை அளிக்குமாறு வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று கூறினேன். ஆனால் முத்துக் குமாரசாமி குடும்பத்தினர் நாங்கள் வறுமையில் வாடவில்லை. எனவே வேலை வேண்டாம் என்று கூறி மனு எழுதித் தர மறுத்து விட்டனர். முத்துக்குமாரசாமியை நான் ஒருபோதும் மிரட்டவில்லை. அமைச்சர் சொன்னதைத்தான் செய்தேன் என்று வாக்குமூலத்தில் செந்தில் தெரிவித்துள்ளார்.

மைத்துனர் வாக்குமூலம்

முத்துகுமாரசாமியின் மைத் துனர் தூத்துக்குடியைச் சேர்ந்த மகாதேவன் என்பவர் அளித் துள்ள வாக்குமூலம்: முத்துகுமார சாமிக்கு எனது தங்கை சரஸ் வதியை திருமணம் செய்து கொடுத்திருந்தோம். எனது தங் கையை பார்க்க கடந்த பிப்ரவரி மாதம் பாளையங்கோட்டை திரு மால்நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது முத்துக்குமாரசாமி மிகவும் மனச் சோர்வுடன் இருந்தார். எனது தங்கையிடம் விசாரித்தேன். `காலி யாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தை நிரப்புவதற்கு மேலிடத்தில் இருந்து பணம் வாங்கச் சொல்லி மிரட்டுகிறார்கள்’ என்று கூறினார்.

இதையடுத்து நான், முத்துக் குமாரசாமியிடம் சில ஆலோசனை களை கூறினேன்.

ஆனால் அவர், `எனது பிரச்சி னையை நானே பார்த்துக் கொள் கிறேன்’ என்று கூறிவிட்டார். இவ்வாறு மகாதேவன் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x