Published : 14 Apr 2015 10:48 AM
Last Updated : 14 Apr 2015 10:48 AM

சகாயம் விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்த தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மதுரை பொதுநலன் வழக்கு மையத்தின் மேலாண்மை அறங் காவலர் கே.கே.ரமேஷ் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கனிமவளக் கொள்ளை யைத் தடுக்க ஆட்சியர், எஸ்பி, கனிமவளத் துறை, வனத்துறை அதிகாரிகள் அடங்கிய தனிப்படை அமைக்க தமிழக அரசு 3.11.2009 அன்று உத்தரவிட்டது. மதுரை மாவட்ட ஆட்சியராக 22.3.2011 முதல் 28.5.2012 வரை உ.சகாயம் பணிபுரிந்தார்.

அவர் ஆட்சியராக இருந்த காலத்தில் கனிமவளக் கொள்ளை யைத் தடுக்க அரசு உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட வில்லை. மேலும் சகாயம், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் குவாரிகள் முறைகேடு களை தடுக்க எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. ஆனால், தற்போது கிரானைட் முறைகேடு களை விசாரிக்க சட்ட ஆணையராக, உயர் நீதிமன்றத் தின் உத்தரவின்பேரில் சகாயம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சகாயத்தை சட்ட ஆணையராக நியமனம் செய்யக் கோரும் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் பணிபுரிந்த காலத்தில், கிரானைட் முறைகேடு நடைபெற் றுள்ளது என்பதை நீதிமன்றத் தில் அரசு தரப்பில் தெரிவிக்க வில்லை. கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உட்பட 6 வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளன. இந்த விவரங்களையும் அரசு தெரிவிக்கவில்லை.

எனவே, கிரானைட் முறைகேடு களை விசாரிக்க சகாயத்தை சட்ட ஆணையராக நியமனம் செய்து தொழில் துறை முதன்மை செயலர் 31.10.2014 அன்று பிறப்பித்த உத்தர வின் அடிப்படையில் சகாயம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின், சகாயத்தின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கின் மனுதாரரும் தன்னை ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க மனு தாக்கல் செய்துள் ளார். தற்போது இங்கு மனு தாக்கல் செய்துள்ளார். அதை ஏற்க முடி யாது. மனு தள்ளுபடி செய்யப்படு கிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x