Published : 04 Apr 2015 09:16 AM
Last Updated : 04 Apr 2015 09:16 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயி கொலையால் பதற்றம்: நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை

தூத்துக்குடி மாவட்டம் திருவை குண்டம் அருகேயுள்ள நவ்வலடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுக ராஜா (45). விவசாயியான இவர் நேற்றுமுன்தினம் இரவு திருவைகுண்டம் போலீஸ் நிலை யம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அப் பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் தலைமையில் போலீ ஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுமுகராஜாவை வெள் ளூரைச் சேர்ந்த மற்றொரு சமு தாயத்தை சேர்ந்த சிலர் வெட் டிக் கொலை செய்தது போலீஸா ரின் விசாரணையில் தெரியவந் துள்ளது. ஆறுமுகராஜாவுக்கும், வெள்ளூரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதுதொடர் பாக ஆறுமுகராஜா கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு திருவை குண்டம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை வாபஸ் பெறக் கோரி வெள்ளூரைச் சேர்ந்த சிலர் ஆறுமுகராஜாவை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதைய டுத்து தனக்கு பாதுகாப்பு அளிக் கக் கோரி ஆறுமுகராஜா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமைதிக் குழு ஏற்படுத்தி தீர்வு காண வேண்டும் என உத்தர விட்டிருந்தது. ஆனால் அமைதிக் குழு உருவாக்குவதிலும், பாது காப்பு அளிப்பதிலும் ஏற்பட்ட தொய்வால், ஆறுமுகராஜா வெட் டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

5 பேர் மீது வழக்கு

இக்கொலை தொடர்பாக வெள்ளூரைச் சேர்ந்த இசக்கி முத்து, பாலமுருகன், தளவாய், ராமலிங்கம் என்ற பெரியவன், மங்களகுறிச்சியைச் சேர்ந்த துரைமுத்து ஆகிய 5 பேர் மீது திருவைகுண்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ராமலிங்கம் என்ற பெரிய வனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற 4 பேரையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.

ஆறுமுகராஜா குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ‘கொம்பன்’ போன்ற ஜாதி மோதல்களை தூண்டும் படங்களை தடை செய்ய வேண் டும் என வலியுறுத்தி, சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர். இதனா்ல் அங்கு பதற்றம் ஏற்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x