Published : 15 Apr 2015 09:12 AM
Last Updated : 15 Apr 2015 09:12 AM

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல் பேரிஜம் ஏரி: ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய இயற்கை நன்னீர் ஏரி

ஆசியாவிலேயே 2-வது மிகப் பெரிய இயற்கை நன்னீர் ஏரியான கொடைக்கானல் பேரிஜம் ஏரி, தற்போது புதுமையான சுற்றுலாத் தலமாக மாறிவருகிறது.

கொடைக்கானலுக்கு ஆண் டுக்கு சராசரியாக 45 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல் கின்றனர். இதில் 60 சதவீதம் பேர் மார்ச் முதல் ஜூலை வரையிலான கோடை சீசனில் வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், குணா குகை, பைன் பாரஸ்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, அமைதிப் பள்ளத் தாக்கு, பில்லர் ராக் உள்ளிட்ட பார்த்து பழகிப்போன 15 சுற்றுலா தலங்களையே மீண்டும் மீண்டும் பார்த்துச் செல்கின்றனர்.

தொடர்ந்து கொடைக்கானலில் பார்த்த இடங்களையே பார்க்க வேண்டி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் சலிப்படைகின்றனர். அதனால், தற்போது கோடை சீசனைத் தவிர, மற்ற காலங்களில் பயணிகள் வருகை குறைந்துள்ளது. கோடை காலத்திலும் இங்குள்ள குளுமையான சீசனை அனு பவிக்கவே பெரும்பாலானோர் வருகின்றனர்.

இந்த நிலையில், கொடைக்கான லில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பேரிஜம் ஏரி தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதுமையான சுற்றுலாத் தலமாக மாறிவருகிறது. இந்த ஏரியை பார்த்து ரசிக்க, தினமும் வரையறுக்கப்பட்ட சுற் றுலாப் பயணிகளை மட்டுமே வனத்துறையினர் அனுமதிக்கின் றனர்.

கொடைக்கானல் நகரில் இருந்து மோயர் பாய்ண்ட் பகுதி சோதனைச் சாவடி வழியாக தொப்பி தூக்கும் பாறை, பேரிஜம் லேக் வியூ, மதிகெட்டான் சோலை ஆகிய பகுதிகளைக் கடந்து சென்றால், பசுமையான பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ள பேரிஜம் ஏரியை அடையலாம்.

ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய இயற்கை நன்னீர் ஏரியான இதைச் சுற்றிலும் பசுமையான மரங்கள், புல்வெளிப் பிரதேசங்கள், இரைச்சல் இல்லாத அமைதியான சூழல், பசுமை போர்த்திய நடைப்பயிற்சி சாலை கள் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணி களை வெகுவாக ஈர்த்துள்ளன.

அதனால், பேரிஜம் ஏரிக்கு சமீப காலமாக வருவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்பகுதிக்கு வருவோர் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வற்றை எடுத்து வரவேண்டும். இங்கு கேண்டீன், கடைகளுக்கு அனுமதி கிடையாது.

வாகனங் களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பைகள், தீப்பற்றும் பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. இப்பகுதியின் இயற்கை சூழலை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இடத்துக்கு சுற்றுலா சென்றால் புத்துணர்ச்சியும், புது அனுபவமும் கிடைப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக் கின்றனர்.

சுற்றுலாவுக்கு ஏற்பாடு

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பேரிஜம் ஏரி பகுதியில் காணப்படும் ஈரச்சேற்று சூழல் கட்டமைப்பு, தற்போது உலகெங்கும் அழிவின் விளிம்பில் உள்ளது. இங்கே படியக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த கரிமச் சத்துக்கள் ரசாயன அமைப்பிலும், உயிரிய அமைப்பிலும் வேறெங்கும் இல்லாதவை. இச்சூழலுக்கு தகுந்த ஏராளமான நுண் தாவரங்கள், விலங்குகள், பூச்சி இனங்கள் வாழ்கின்றன.

மிக அபூர்வமான பூச்சிகளை உண்ணும் தாவரமான `யுட்ரிக்குளோரியா ஆஸ்ட்டிராலிஸ்' இங்கு காணப்படுகிறது.

மோயர் பாய்ண்ட்டில் இருந்து பேரிஜம் ஏரிக்கு செல்ல 30 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. கோடை சீசனையொட்டி, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பஸ்ஸும் இயக்கப்படுகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x