Published : 10 Apr 2015 09:33 AM
Last Updated : 10 Apr 2015 09:33 AM

மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல்; முற்றுகை

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடிவு செய்து, முதல்கட்ட ஆய்வுப் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்தும், அணை கட்டும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக தடுத்த நிறுத்தக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பு அமைப்புகளான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் நேற்று இப்போராட்டங்கள் நடைபெற்றன.

தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ஏ.லாசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ என்.பெரியசாமி தலைமையில் ரயில் மறியல் முயற்சி நடைபெற்றது.

கும்பகோணத்தில் சோழன் விரைவு ரயிலை மறித்த 94 பேரும், பட்டுக்கோட்டையில் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட 66 பேரும், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 1,400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.…

நாகப்பட்டினம் ரயில் நிலையத் துக்குள் நுழைய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் தடுத்ததனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மயிலாடுதுறை யில் ரயில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரும், நாகை மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப் பட்டனர்.

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய இடங் களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x