Published : 07 Apr 2015 08:52 AM
Last Updated : 07 Apr 2015 08:52 AM

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியின் வீடு, அலுவலகத்தில் சோதனையிட சிபிசிஐடி முடிவு

திருநெல்வேலியில் தற்கொலை செய்த வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி வீடு மற்றும் வேளாண்மை பொறியியல்துறை அலுவலகத்தில் சோதனையிட அனுமதி கோரி, நீதிமன்றத்தில் நேற்று சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

முத்துக்குமாரசாமி தற் கொலை வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சர் அக்ரிகிருஷ்ண மூர்த்தி, சென்னையில் உள்ள வேளாண்மை துறை தலைமைப் பொறியாளர் எம்.செந்தில் ஆகி யோர் கைது செய்யப்பட்ட னர். நேற்றுமுன்தினம் இவர்கள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங் கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் முதல்வகுப்பு

கைதான அக்ரி கிருஷ்ண மூர்த்தியும், செந்திலும் வருமான வரி கட்டி வருவதால் தங்களை முதல்வகுப்பில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி மத்திய சிறை ‘சி’பிளாக்கில் உள்ள 8 வது எண் செல் வரிசையில், இவர்களுக்கு முதல் வகுப்பு தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விசாரணை கைதி என்பதால் தங்களது சொந்த உடையை அணிய இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு கைதி எண் 7905, இன்ஜினீயர் செந்திலுக்கு கைதி எண் 7906 வழங்கப்பட்டுள்ளது.

நேற்று காலை அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோர் சிறை வளாகத்திலேயே நடைபயிற்சி சென்றனர். பின்னர் காலை உணவாக சப்பாத்தி, மதியம் சைவ சாப்பாடு, இரவில் சப்பாத்தி வழங்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை

அக்ரிகிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளதால், அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்க வேண்டும் என்று சிறை கண்காணிப் பாளர் கனகராஜிடம், கைதானவர் கள் சார்பாக மனு கொடுக்கப் பட்டது. இதையடுத்து பாளையங் கோட்டை மத்திய சிறை மருத்துவ மனையிலேயே அவர்களுக்கு நேற்று மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இதனிடையே அக்ரி கிருஷ்ண மூர்த்தியை அவரது மகன்கள் தர், அரவிந்த், உதவியாளர் வெங்கடேஷ், மதுரையிலிருந்து மூத்த வழக்கறிஞர் ராமர் தலைமையிலான வழக்கறிஞர் குழுவினர் சிறையில் சந்தித்தனர்.

ஜாமீன் மனு தாக்கல் இல்லை

திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை வரை அவ்வாறு மனு எதுவும் தாக்கல் செய்யப் படவில்லை.

இந்த விவகாரத்தில் அதிமுக மேலிடத்தின் ஒப்புதலுக்கு பின்னரே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

அக்ரி கிருஷ்ண மூர்த்தியையும், செந்திலையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் தரப்பில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

சோதனையிட முடிவு

ஆனால் இந்த வழக்கில் ஆதாரங் களை திரட்டும் வகையில் பாளை யங்கோட்டை திருமால்நகரிலுள்ள முத்துக்குமாரசாமியின் வீட்டிலும், அவர் பணிபுரிந்த என்.ஜி.ஓ. காலனி யிலுள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்திலும் சோதனையிட அனுமதிகேட்டு சிபிசிஐடி போலீஸார் தரப்பில் நேற்று 3-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x