Published : 07 Apr 2015 10:53 AM
Last Updated : 07 Apr 2015 10:53 AM

தமிழகம் முழுவதும் 4 ஆண்டுகளில் 2.61 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டன: அமைச்சர் ஆனந்தன் தகவல்

மாபெரும் அளவில் மரம் நடும் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 2.61 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று வனத்துறை அமைச்சர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்களின் 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழகத்தின் சார்பில் வனத்துறை அமைச்சர் ஆனந்தன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாநாட்டில் அமைச்சர் ஆனந்தன் பேசியதாவது:

தமிழகத்தில் பசுமைப் போர் வையை உருவாக்க பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாபெரும் அளவில் மரம் நடும் திட்டத்தில் தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.175.89 கோடி செலவில் 2.61 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.

அரசு, தனியார் நிறுவனங்கள், சாலையோரங்கள், ஊராட்சிப் பகுதிகள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், வனப்பகுதிகள் போன்ற இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தியதால் தமிழகத்தின் வனப்பரப்பு 219 சதுர கி.மீ. உயர்ந்து, தற்போது வனப்பரப்பு மற்றும் பசுமைப் போர்வை 28,910 சதுர கி.மீட்டராக உள்ளது.

காடுகளில் இருந்து யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வெளியேறாத வகையில், 1,895.64 கி.மீ. அளவில் அகழிகள் அமைக்கப்பட்டுள்ளன. 185.58 கி.மீ. சூரிய மின் வேலிகள், கசிவுநீர் குட்டைகள், தடுப்பணைகள், தீவன தோட்டப் பயிர்கள் போன்றவற்றை ஏற்படுத்தி மனித - வன உயிரின மோதல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதனால், 2011-ம் ஆண்டு 163 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை, 2014-ல் 229 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் ஆனந்தன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x