Published : 25 Apr 2015 08:49 AM
Last Updated : 25 Apr 2015 08:49 AM
மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் நியமனம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பத்திரிகையாளர் அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத் தின் உறுப்பினர் செயலராக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம் பர் மாதம் கார்த்திகேயன் நியமிக் கப்பட்டார். இவர் 2008-ம் ஆண்டு ஜூலை முதல் 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை செய்ய ஊழல் தடுப்பு கண் காணிப்புத் துறை ஆணையர் 2012 ம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டார். அதனடிப்படையில், ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை ஆய்வாளர் அதே ஆண்டு நவம்பர் மாதம் புகார் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில், அவரை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலராக நியமித்தது செல் லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், கார்த்தி கேயன் நியமனத்தை செல்லாது என்று உத்தரவிட்டார். இத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. கார்த்திகேயனும் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் சதீஷ் கே. அக்னி ஹோத்ரி, எம்.வேணுகோபால் ஆகி யோர் முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “கார்த்தி கேயன் நியமனத்தை எதிர்த்து அன்பழகன் தொடர்ந்த வழக்கை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முழுமையாக விசாரித்த பின்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் குறை எதுவும் இல்லை. எனவே, கார்த்திகேயனை உறுப்பினர் செயலராக நியமித்த உத்தரவு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவு செல்லும். இந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT